ரஜினி ஆசைப்பட்டு கேட்டும்... பொன்னியின் செல்வனில் நடிக்க வாய்ப்பளிக்காதது ஏன்? - உண்மையை போட்டுடைத்த மணிரத்னம்

Published : Sep 19, 2022, 02:00 PM IST

பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்டும் அவரை நடிக்க வைக்காததற்கான காரணத்தை மணிரத்னம் கூறி உள்ளார்.

PREV
14
ரஜினி ஆசைப்பட்டு கேட்டும்... பொன்னியின் செல்வனில் நடிக்க வாய்ப்பளிக்காதது ஏன்? - உண்மையை போட்டுடைத்த மணிரத்னம்

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 11 நாட்களே உள்ளதால், புரமோஷன் பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றி பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

24

அதன்படி அவர் கூறியதாவது: “தளபதி படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ என்கிற பாடலுக்கு பொன்னியின் செல்வனுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பொன்னியின் செல்வனில் வரும் பூங்குழலியின் கேரக்டரை தான் அந்த பாடலில் பயன்படுத்தினேன். முதலில் பொன்னியின் செல்வன் படம் முழுக்க தூய தமிழில் தான் வசனங்களை பேச வைக்க முயற்சி செய்தோம். அது செட் ஆகாததால் சுலபமாக பேசும் அளவுக்கு மாற்றிக் கொண்டோம்.

இதையும் படியுங்கள்... பம்பர் ஹிட் அடித்த வெந்து தணிந்தது காடு... நான்கே நாளில் சிம்பு படம் குவித்த மொத்த வசூல் இத்தனை கோடியா?

34

கல்கியின் இந்த கதையை படமாக எடுக்க ஏதுவாக திரைக்கதை அமைக்க ஜெயமோகனும், குமரவேலும் எனக்கு உதவினார்கள். புத்தகத்தில் இருப்பது போன்று படத்துக்காக காட்சிப்படுத்த முடியாது என்பதால் பல காட்சிகளை சினிமாவுக்கு ஏற்றபடியும், அனைவருக்கும் சுலபமாக புரியும் படியும் காட்சிப்படுத்தி இருக்கிறோம். கொரோனா காலகட்டத்தில் நான் மிகவும் பயந்த விஷயம் என்றால் அது நடிகர், நடிகைகள் குண்டாகிவிடுவார்களோ என்பது தான். ஆனால் அவர்கள் அந்த சூழலிலும் வீட்டில் இருந்தபடியே கடுமையாக உடற்பயிற்சி செய்து அதே உடற்தகுதியோடு இருந்தார்கள்.

44

இறுதியாக இப்படத்தில் ரஜினியை நடிக்க வைக்காதது ஏன் என்கிற கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம், இப்படத்தில் ரஜினியை நடிக்க வைத்தால் கல்கி மற்றும் ரஜினி என இரு தரப்பு ரசிகர்களிடமும் மாட்டிக் கொள்ள நேரிடும் என்ற ஒரே காரணத்தால் ரஜினிக்கு நோ சொல்லிவிட்டேன் என கூறினார். ரஜினி இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... வாத்தி கம்மிங்... திடீரென ரிலீஸ் தேதியை அறிவித்து ஷாக் கொடுத்த தனுஷின் வாத்தி படக்குழு - எப்போ ரிலீஸ் தெரியுமா

Read more Photos on
click me!

Recommended Stories