சிம்பு நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் நடிகர் சிம்பு, முத்து வீரன் என்கிற 20 வயது இளைஞனாக நடித்துள்ளார். வழக்கமாக காதல் படங்களை இயக்கி வந்த கவுதம் மேனன் இப்படம் மூலம் வித்தியாசமான கதைக்களத்தை கையில் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
24
வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். கிராமத்தில் இருந்து மும்பைக்கு வேலைக்கு செல்லும் சிம்பு அங்கு எப்படி டான் ஆனார் என்பதை இப்படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார் கவுதம் மேனன். இப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளதாக நேற்று நடைபெற்ற சக்சஸ் மீட்டில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்தார்.
அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை கவுதம் மேனனும், ஜெயமோகனும் தொடங்கிவிட்டதாக அவர் கூறினார். இந்நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படம் முதல் வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி முதல் நாளில் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் இரண்டாம் நாளில் ரூ.7 கோடி வசூல் செய்திருந்தது.
44
அதேபோல் மூன்றாம் நாளில் ரூ.8 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியிருந்த இப்படம் நான்காம் நாளான நேற்று ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்திருந்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் நான்கு நாட்களில் ரூ.35 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது இப்படம். விரைவில் இப்படம் ரூ.50 கோடி வசூலைக் கடந்து சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.