தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தற்போது சினிமாவில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் ரிலீசான தி லெஜண்ட் திரைப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தனர். மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்திருந்தார்.