Published : Dec 13, 2024, 12:11 PM ISTUpdated : Dec 13, 2024, 12:51 PM IST
Highest paid actor in India : புஷ்பா 2 படத்துக்காக நடிகர் அல்லு அர்ஜுன், 300 கோடி சம்பளம் வாங்கிய நிலையில், அவரைவிட அதிக சம்பளம் வாங்கும் நடிகர் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சினிமா நட்சத்திரங்கள் தான் தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்கள். அதிலும் நடிகைகளை காட்டிலும் நடிகர்கள் தான் அதிகளாவில் சம்பளம் வாங்கி வருகிறார்கள். நடிகர்கள் சம்பளம் 100 கோடி, 200 கோடி என ஜெட் வேகத்தில் உயர்ந்த வண்ணம் உள்ளது. அதிலும் தற்போது பான் இந்தியா அளவில் படங்கள் வெற்றியடைவதால், நடிகர்கள் சம்பளம் 300 கோடியை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த பட்டியலில் இரண்டு நடிகர்கள் உள்ளன.
24
Allu Arjun, Shah Rukh Khan
அந்த வகையில் கடந்த ஆண்டு வரை அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருந்த நிலையில், அண்மையில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் மூலம் நடிகர் அல்லு அர்ஜுன் அந்த பட்டியலில் முதலிடம் பிடித்தார். அவருக்கு அப்படத்திற்காக ரூ.300 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. அப்படம் அவரை பான் இந்தியா அளவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆகவும் மாற்றி இருக்கிறது. புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் 1000 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி வருகிறது.
ஆனால் அல்லு அர்ஜுனை விட ஒரு நடிகர் அதிக சம்பளம் வாங்கி உள்ள தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. அவர் வேறுயாருமில்லை பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தான். அவர் பதான் படத்தில் நடித்ததற்காக ரூ.350 கோடி சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. அவர் நடித்த பதான் திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. அப்படத்திற்கு முன் அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்ததால், பதான் படத்தில் சம்பளமே வாங்காமல் லாபத்தில் இருந்து பங்கு தர வேண்டும் என்கிற ஒப்பந்தத்தோடு நடித்துக் கொடுத்தாராம் ஷாருக்.
44
Shah Rukh Khan Salary
பதான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டதோடு ஆயிரம் கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. இதனால் படத்தின் லாபத்தில் இருந்து 55 சதவீதம் அதாவது 350 கோடியை சம்பளமாக கொடுத்ததாம் படக்குழு. இதையடுத்து அவர் அட்லீ இயக்கத்தில் நடித்த ஜவான் திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. அப்படம் அவரே தயாரித்த படம் என்பதால் அதில் ஒரு தயாரிப்பாளராக பல கோடிகளை சம்பாதித்துவிட்டார் ஷாருக். தற்போது அவரின் சொத்து மதிப்பு 7 ஆயிரத்து 300 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.