
சன் டிவியில் ஒளிபரப்பான 'மெட்டிஒலி' தொடரில் துணை இயக்குனராகவும், நடிகராகவும் தன்னுடைய கெரியரை துவங்கி அதன் பின்னர் கோலங்கள் சீரியல் மூலமாக தன்னை இயக்குனராக நிலை நிறுத்திக் கொண்டவர் திருச்செல்வம். 'கோலங்கள்' சீரியலில் தொல்காப்பியன் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்தார்.
சுமார் ஐந்து ஆண்டுகள் ஓடிய இந்த தொடர் இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இந்த சீரியல் மூலமாக நடிகை தேவயானி சீரியலுக்குள் நுழைந்து வெற்றி கண்டார். இந்த சீரியலுக்கு பின்னர் அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம், போன்ற தொடர்களை இயக்கிய திருச்செல்வம் 2002 ஆம் ஆண்டு எதிர்நீச்சல் என்கிற தொடரை இயக்கி ஜீவானந்தம் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
'கூலி' படத்தின் சிக்கிட்டு கிலிம்ஸி; செம்ம வைப் மூடில் டான்ஸில் தெறிக்கவிட்ட தலைவர்!
கோலங்கள் சீரியலுக்கு பின்னர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது இந்த தொடர். சுமார் இரண்டு ஆண்டுகள் ஒளிபரப்பான இந்த தொடரில், கன்னட சீரியல் நடிகை மதுமிதா கதாநாயகியாக நடித்திருந்த நிலையில், பார்வதி, வெங்கட்ராமன், கனிகா, ஹரிப்ரியா இசை, பிரியதர்ஷினி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த சீரியலுக்கு என மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்த நிலையில், இத்தொடரில் குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து வில்லனாக நடித்திருந்தாலும், இவரின் நடிப்பு மற்றும் டயலாக் பல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கண்டெண்டாக அமைந்தது.
இவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், புதிய குணசேகரனாக எழுத்தாளர் மற்றும் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்தார். மக்கள் இவரின் நடிப்பை ஏற்றுக் கொண்டாலும், TRP ரேட்டிங் தடுமாற்றங்களை சந்தித்தது.
கதைக்களம் சுவாரசியம் இல்லாமல் நகர்ந்த நிலையில், இந்த தொடரை வேறு ஒரு நேரத்திற்கு மாற்றிக் கொள்ள சன் டிவி தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த இயக்குனர் திருச்செல்வம், அதிரடியாக இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்தார். மேலும் இந்த தொடரின் இரண்டாவது பாகம் உருவாகும் என்பதையும் அறிவித்தார். அதன்படி இந்த தொடர் முடிவடைந்து சில மாதங்கள் ஆகும் நிலையில், கூடிய விரைவில் எதிர்நீச்சல் 2 தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இதனை அறிவிக்கும் விதமாக, இந்த தொடரின் ப்ரோமோவும் சன் டிவியில் வெளியானது.
'மகாராஜா' பட நடிகர் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட நாக சைதன்யா - சோபிதா! போட்டோஸ்!
முதல் பாகத்தில் நடித்த மதுமிதா இந்த தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தற்போது நினைத்தாலே இனிக்கும் என்கிற தொடரில் நடித்த நாயகி பார்வதி நடிக்க உள்ளார். அதை போல் முதல் பாகத்தில் நடித்த கனிகா, ஹரிப்ரியா இசை, பிரியதர்ஷினி, ஆகியோர் நடிக்கின்றனர். அதேபோல் முதல் பாகத்தில் நடித்த சபரி பிரசாத், விபுராமன், ஞானம், சத்யபிரியா, போன்ற நடிகர்கள் நடித்தாலும் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் நடிக்கிறார். இவர் ஏற்கனவே கலகலப்பு, பாஸ் என்கிற பாஸ்கரன், போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் சில டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இவரும் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு சிறப்பான தேர்வாகவே இருப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆண்டாளாக வந்து ஆண்டனிக்கு கழுத்தை நீட்டிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்