Chiyaan Vikram
சீயான் விக்ரம்
நடிகர், பாடகர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் சீயான் விக்ரம். இவர் இதுவரை 62 படங்களில் நடித்துள்ளார். இதில் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் தங்கலான். பா.ரஞ்சித் இயக்கிய இப்படத்தில் ஆதிவாசியாக நடித்திருந்தார் விக்ரம். இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரமின் 62வது படத்தை அருண்குமார் இயக்கி வருகிறார்.
Veera Dheera Sooran Vikram
வீர தீர சூரன்
இப்படத்திற்கு வீர தீர சூரன் என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். மேலும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வருகிற 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் வீர தீர சூரன் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... சீயான் விக்ரம் நடித்துள்ள' வீர தீர சூரன் பார்ட் 2 ' படத்தின் டீசர் வெளியானது!
Vikram Next Movie
விக்ரமின் அடுத்த படம்
வீர தீர சூரன் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமின் 63-வது படம் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளிவர உள்ளது. இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே யோகிபாபு நடித்த மண்டேலா, சிவகார்த்திகேயனின் மாவீரன் போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். இவர் விக்ரமை வைத்து இயக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்திற்கு நடிகர் விக்ரம் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது.
Actor Vikram Salary
விக்ரம் சம்பளம்
தங்கலான் படத்திற்காக ரூ.30 கோடி சம்பளமாக வாங்கி இருந்த நடிகர் விக்ரம், சீயான் 63 படத்துக்காக ரூ.50 கோடி சம்பளமாக வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தங்கலான் படத்துக்கு வாங்கியதை விட டபுள் மடங்கு சம்பளத்தை விக்ரம் உயர்த்தி உள்ளது தான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திற்கு கூட நடிகர் விக்ரம் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... விக்ரம் - எம்.எஸ்.விஸ்வநாதன் இணைந்து பாடிய பாடல் எது? அட சூப்பர்ஹிட் பாட்டு தானா?