Raanav, Pavithra
பிக் பாஸ் தமிழ் சீசன் 8
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கப்பட்டது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்முறையாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 65 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் வார வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். ஆனால் கடந்த வாரம் மட்டும் டபுள் எவிக்ஷன் நடந்தது. அதில் சாச்சனா மற்றும் ஆனந்தி எலிமினேட் செய்யப்பட்டனர்.
Ansidha, VJ Vishal
இந்த வார டாஸ்க்
இதையடுத்து இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் மற்றும் மேனேஜர்கள் டாஸ்க் நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் வேலை செய்தால் தான் வீட்டுக்கு தேவையான தண்ணீர், கேஸ் ஆகியவை கிடைக்கும் என்கிற நிலை இருந்தது. வழக்கம் போல் இந்த டாஸ்க்கிலும் சண்டைகள் அதிகளவில் நடைபெற்றன. இந்த டாஸ்க்கின் முடிவில் மேனேஜர்கள் அணியில் இருந்து சிறந்த போட்டியாளர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸும் வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... சிவகார்திகேயனுக்காக ரூல்ஸை மாற்றிய பிக்பாஸ்! சர்ச்சையில் சிக்க வைத்த செம்ம சம்பவம்!
Tharshika, Vj Vishal
தப்பித்த ஜெஃப்ரி
அந்த வகையில் மேனேஜர் அணியில் சிறப்பாக விளையாடிய போட்டியாளராக ஜெஃப்ரி தேர்வு செய்யப்பட்டு அவருக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வழங்கப்பட்டது. அதேபோல் தொழிலாளர்கள் அணியில் இருந்து சிறப்பாக பங்கெடுத்துக் கொள்ளாத போட்டியாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவர் நேரடியாக அடுத்த வார எவிக்ஷனுக்கு தேர்வு செய்யப்பட்டார். அதில் அனைவரும் சேர்ந்து ராணவ்வை தேர்வு செய்துள்ளனர். இதனால் அவர் அடுத்த வார எவிக்ஷனுக்கு நேரடியாக தேர்வானார்.
Tharshika, Vj Vishal in Danger Zone
டபுள் எவிக்ஷனா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளதால் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த வார நாமினேஷனில் 9 போட்டியாளர்கள் உள்ளனர். அவர்களில் பவித்ரா, செளந்தர்யா, ஜாக்குலின், அருண் ஆகியோர் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளதால் அவர்கள் இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் பிக் பாஸ் வீட்டில் காதல் புறாக்களாக வலம் வரும் தர்ஷிகா மற்றும் விஜே விஷால் தான் இந்த வார ஓட்டிங்கில் கடைசி இடத்தில் உள்ளனர். இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தால் இவர்கள் இருவர் தான் வெளியேறுவார்கள். ஒருவேளை சிங்கிள் எவிக்ஷனாக இருந்தால் தர்ஷிகா மட்டும் வெளியேற வாய்ப்புள்ளது. எது எப்படியோ இந்த காதல் ஜோடி இந்த வாரம் பிரிய உள்ளது மட்டும் உறுதி.
இதையும் படியுங்கள்... பிக் பாஸில் மிட் வீக் எவிக்ஷன்! அதிர்ச்சியுடன் வீட்டுக்கு கிளம்பப்போவது யார்?