சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா இருவரும், திருமணம் முடிந்த பின்னர் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
Naga Chaitanya and Sobhita Grand Marriage Celebration
டிசம்பர் 4 ஆம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தன்னுடைய 2 வருட காதலியான சோபிதாவை கரம்பிடித்தார் நாக சைதன்யா. பாரம்பரிய முறைப்படி, நடந்த இந்த திருமணத்தில் சோபிதா மற்றும் நாக சைத்தாயா இருவருமே மிகவும் நேர்த்தியான ட்ரடிஷனல் உடை அணிந்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டனர்.
27
Nagarjuna Son Naga Chaitanya 2nd Marriage
சோபிதா காஞ்சிபுர தங்க நிற பட்டு புடவையிலும், நாக சைதன்யா பட்டு வேஷ்டி சட்டையிலும் கம்பீரமாக காணப்பட்டார். திருமணம் முடிந்த பின்னர் இவர்கள் இருவரும் வெளியிட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வாழ்த்துக்களை குவித்தது.
திருமணம் முடிந்த கையோடு, சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா ஜோடி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நிலையில், தற்போது அனுராக் காஷ்யப் மகள் ஆலியா காஷ்யப் மற்றும் ஷேன் கிரிகோயரின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டுள்ளனர்.
47
Naga Chaitanya and Sobhita After Marriage Vist Tirupati Temple
திருமணம் முடிந்த கையோடு, சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா ஜோடி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நிலையில், தற்போது அனுராக் காஷ்யப் மகள் ஆலியா காஷ்யப் மற்றும் ஷேன் கிரிகோயரின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் இருவருமே மனதைத் தொடும் வகையில் நேர்த்தியான உடை அணிந்திருந்தனர். சோபிதா கிரீம் கலர் சல்வார் அணிந்திருந்த நிலையில், நாக சைதன்யா கருப்பு நிற பிளேசர் அணிந்திருந்தார். மேலும் கழுத்தில் புதிய தாலியோடு, மிகவும் ஸ்டைலிஷாக ஒரு கொண்டை மட்டுமே போட்டிருந்தார். இவரின் இந்த புதிய லுக், சோபிதாவை மிகவும் அழகாக காட்டியது.
67
Aaliyah Kashyap Wedding Celebration
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்பட கலைஞர்கள் உட்பட, பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் சைதன்யா - சோபிதாவுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த திருமண வரவேற்ப்பில் அபிஷேக் பச்சன், சுஹானா கான், தாப்ஸி பன்னு, பாவெல் குலாட்டி மற்றும் ஆரி உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். நடிகர் அனுராக் காஷ்யப் மிகவும் பிரபலமான பாலிவுட் பட இயக்குனராக இருந்தாலும், தமிழில் சில படங்களில் நடித்து தமிழ் திரையுலக ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சியமானவர். குறிப்பாக விஜய் சேதுபதி நடிப்பில் 100 கோடி வசூல் சாதனை செய்த, மகாராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருடைய மகள் ஆலியா காஷ்யப்புக்கு தான் தற்போது பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.