ஏ.ஆர்.ரகுமானுக்கு கிடைத்த பெருமை; Trinity Laban இசைப்பள்ளியின் கௌரவத் தலைவராக நியமனம்!

First Published | Dec 12, 2024, 4:16 PM IST

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் லண்டனில் உள்ள Trinity Laban இசைப்பள்ளியின் கௌரவத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது அவருக்கு கிடைத்த மற்றொரு பெருமையாக பார்க்கப்படுகிறது.
 

AR Rahman Debut in Maniratnam Movie

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதை தனதாக்கிக்கொண்ட இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தன்னுடைய மெய் மறக்க வைக்கும் இசையால் ரசிகர்கள் உள்ளங்களை சூறையாடி வருகிறார். சில இசையமைப்பாளர்கள் போடும் பாடல்கள் புதிதாக இருந்தாலும், இசை மற்றும் ராகம் ஏற்கனவே கேட்டது போன்ற ஒரு உணர்வை கொடுக்கும். இதற்க்கு ராஜாவின் இசையும் விதிவிலக்கு அல்ல.

Oscar Award Winner AR Rahman

ஆனால் ஏ.ஆர்.ரகுமான் இசை மட்டும் ஏற்கனவே கேட்டிடாத ஒரு புது அனுபவத்தை கொடுக்கக்கூடியது. அதே போல் இவருடைய  பாடல்கள், பலருக்கு ஒரு முறை கேட்டால் பிடிக்காது... கேட்க கேட்க தான் பிடிக்கும். இசையில் தொடர்ந்து பல சாதனைகளை செய்து வரும் ஏ.ஆர்.ரகுமான், தென்னிந்திய பிரபலங்களுக்கு எட்டா கனியாக இருந்த ஆஸ்கர் விருதை வென்ற பெருமைக்குரியவர் . ஹாலிவுட் படமான ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுக்காக தான் ஒரிஜினல் பாடல் பிரிவில் இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது. 

ஆண்டாளாக வந்து ஆண்டனிக்கு கழுத்தை நீட்டிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்
 

Tap to resize

AR Rahman Divorce Controversy

திரையுலகை பொறுத்தவரை எந்த ஒரு கிசுகிசுவில் சிக்காத மிஸ்டர் பர்ஃபெட்டாக வலம் வந்து கொண்டிருந்த ஏ.ஆர்.ரகுமானின் குடும்ப வாழ்க்கை சமீபத்தில் அதிகம் விவாதிக்கப்பட்ட ஒன்றாக மாறியது. இதற்க்கு காரணம், 29 ஆண்டுகள் இசைப்புயலில் கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து கொண்டும், அவருக்கு ஒரு சிறந்த மனைவியாகவும், அவரின் குழந்தைகளுக்கு தாயாகவும் இருந்த சாய்ரா பானு விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தார். இதற்க்கு பல காரணங்கள் கூறப்பட்டது. அதே போல் ஏ.ஆர்.ரகுமான் நற்பெயரை கெடுக்கும் விதத்தில் சிலர் அவரை மோசமாக சித்தரித்த நிலையில், இதற்க்கு சாய்ரா பானு தன்னுடைய கணவர் கண்ணியமானவர், என்னுடைய உடல்நிலை காரணமாகவே அவரை விட்டு பிரிவதாக தெரிவித்தார்.

AR Rahman Appointed Honorary Head of Trinity Laban

தன்னுடைய மனதில் பல கஷ்டங்கள் இருந்தாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் மக்களை மகிழ்விக்க தன்னுடைய இசை பணியை தொடர்ந்து வரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு தற்போது முக்கிய பெருமை ஒன்றும் கிடைத்துள்ளது. அதாவது இவர் "இசை நாடகம் மற்றும் சமகால நடனத்திற்கான கன்சர்வேட்டரியான டிரினிட்டி லாபனின் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்". 

"இசை, நடனம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை மனித வெளிப்பாட்டின் பரந்த தன்மையை ஆராய்வதற்கு முதன்மையான யுகத்தில் நாம் வாழ்கிறோம்" என்று ஏஆர் ரகுமான் அங்கு பேசியுள்ளார்.

ராகவேந்திரா முதல் சிட்டி வரை; சூப்பர் ஸ்டார் நடித்த தனித்துவமான டாப் 10 கதாபாத்திரங்கள்!
 

Trinity Laban Statement:

மேலும் இதுகுறித்து தெரிவித்துள்ள டிரினிட்டி லாபன் "இன்று, உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை டிரினிட்டி லாபனின் கெளரவத் தலைவராக அறிவிக்கும் பெருமை எங்களுக்குக் கிடைத்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மானுடனான எங்கள் ஒத்துழைப்பு, 2008 ஆம் ஆண்டு துவங்கியது. அவர் KM மியூசிக் கன்சர்வேட்டரியை நிறுவியபோதில் இருந்து தொடர்கிறது. இந்த ஆண்டு, டிரினிட்டி லாபன் முறைப்படி கூட்டு சேர்ந்துள்ளது. கேஎம்எம்சி, மாணவர்கள் தங்கள் படிப்பை சென்னைக்கும் லண்டனுக்கும் இடையில் பிரிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. எல்லைகளைத் தாண்டி கருத்துக்கள் மற்றும் மரபுகளின் பரிமாற்றத்தை வளர்க்கிறது." என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!