
Top 5 Best Movies of Trisha : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். ஜோடி படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான த்ரிஷா சாமி, கில்லி, திருப்பாச்சி, என்னை அறிந்தால், 96, பேட்ட, பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, லியோ, கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம் ஆகிய ஹிட் படங்களில் நடித்தார். தற்போது இவரது நடிப்பில் விடா முயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப், சூர்யா 45, ராம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் த்ரிஷா நடிப்பில் வந்த டாப் 5 பெஸ்ட் மூவிஸ் என்னென்ன, இனி வரும் படங்களில் சிறப்பான படங்களாக எது இருக்கும் என்று பார்க்கலாம் வாங்க.
பொன்னியின் செல்வன் 1
வரலாற்று கதையை மையப்படுத்திய பொன்னியின் செல்வன் 1 த்ரிஷாவிற்கு திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. கடந்த 2022ல் திரைக்கு வந்த இந்தப் படம் அதிக வசூல் குவித்தது. கிட்டத்தட்ட ரூ.500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சிறந்த படமாக அமைந்தது. இந்தப் படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் அதிகளவில் பேசப்பட்டது.
கட்டா மீத்தா:
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய் குமார், த்ரிஷா முன்னணி ரோலில் நடித்து வெளியான படம் கட்டா மீத்தா. ரூ.35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.62 கோடி வரையில் வசூல் குவித்தது. அரசியல் காமெடி ஜானரில் இந்தப் படம் உருவாக்கப்பட்டது. காண்டிராக் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சச்சின் டிச்சுகுலேயின் வாழ்க்கையை மையப்படுத்திய இந்தப் படம் த்ரிஷாவிற்கு சிறந்த படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மோகினி:
ரமணா மாதேஷ் இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் திகில் கதையை மையப்படுத்திய இந்தப் படம் த்ரிஷா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். சென்னையில் வசிக்கும் பிரபலமான யூடியூப் செஃப் வைஷ்ணவியை சுற்றி இந்த கதை நகர்கிறது. நண்பனுக்கு உதவி செய்ய லண்டன் செல்லும் போது நடக்கும் சம்பவங்கள் தான் கதை.
பொன்னியின் செல்வன் 2:
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லெட்சுமி, சோபிதா துலிபாலா ஆகியோர் பலர் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் பொன்னியின் செல்வன் 2. உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ரூ.345 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து 2023ஆம் ஆண்டில் அதிக வசூல் குவித்த 3ஆவது படம் என்ற சாதனையை இந்தப் படம் படைத்தது.
வர்ஷம்:
இயக்குநர் ஷோபம் இயக்கத்தில் பிரபாஸ், த்ரிஷா, கோபிசந்த் ஆகியோர் பலர் நடிப்பில் 2004ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் வர்ஷம். வெங்கட், ஒரு வேலையில்லாத இளைஞன், வாரங்கலில் ஒரு ரயில் பயணத்தில் நடுத்தர குடும்பத்து பெண்ணான சைலஜாவைச் சந்திக்கிறான். அதில் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் காதல் ஏற்படுகிறது. இதற்கிடையில் சைலஜா பத்ரண்ணா என்ற அரசியல்வாதியின் கண்ணில் படுகிறாள். சைலஜாவின் மீது காதல் வயப்படுகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவம் தான் வர்ஷம் படத்தின் கதை. இந்தப் படம் த்ர்ஷாவின் சினிமா வாழ்க்கையில் சிறந்த படமாக அமைந்தது.