காளிதாஸ் ஜெயராம் ரிஷப்ஷன்; அம்மா ஷாலினியோடு அழகு தேவதையாக வந்த அஜித் மகள்!

First Published | Dec 13, 2024, 9:43 AM IST

Kalidas Jayaram wedding reception : காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காளிங்கராயர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கோலிவுட் பிரபலங்கள் படையெடுத்து வந்து கலந்துகொண்டுள்ளனர்.

AL Vijay at Kalidas Jayaram Reception

மலையாள நடிகர் ஜெயராம் தமிழிலும் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவரைப்போல் இவரது மகன் காளிதாஸ் ஜெயராமும் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். அண்மையில் கூட தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ராயன் திரைப்படத்தில் தனுஷின் தம்பியாக நடித்திருந்தார் காளிதாஸ்.

CM Stalin at Kalidas Jayaram Reception

காளிதாஸ் ஜெயராம், மாடல் அழகியான தாரிணி காளிங்கராயர் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு திருமணம் நிச்சயம் ஆன நிலையில், இந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த வாரம் காளிதாஸ் - தாரிணி ஜோடியின் திருமணம் கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள கோவிலில் வைத்து நடைபெற்றது. இதில் உறவினர்களும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

Tap to resize

Karthi attend Kalidas Jayaram Reception

இதையடுத்து இந்த ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், தமிழ் திரையுலக பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதையும் படியுங்கள்... கோவிலில் சிம்பிளாக நடந்த திருமணம்; ஜமீன் வீட்டு பெண்ணை கரம்பிடித்தார் காளிதாஸ் ஜெயராம்!!

Ajith Family at Kalidas Jayaram Reception

அதேபோல் நடிகர்கள் கார்த்தி, இயக்குனர் ஏ.எல்.விஜய் ஆகியோரும் இந்த திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி தன் மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் உடன் வந்து இந்த விழாவில் கலந்துகொண்டார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Anoushka, aadvik and Shalini

அஜித் அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் கலந்துகொள்ள பயிற்சி எடுத்து வருவதால் அவர் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. அம்மா ஷாலினியை போல் அழகு தேவதையாக மின்னிய அஜித் மகள் அனோஷ்காவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் கோலிவுட்டுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ஜெயராம் மகன் காளிதாஸ் - தாரிணி ப்ரீ வெட்டிங் கொண்டாட்ட புகைப்படங்கள்!

Latest Videos

click me!