செம்ம கியூட்... முதல் முறையாக வெளியான பிரியங்கா சோப்ரா மகள் மால்டி மேரி புகைப்படம்! குவியும் லைக்ஸ்!

Published : Jan 31, 2023, 04:01 PM IST

பிரியங்கா சோப்ரா -நிக் ஜோனஸ் ஜோடியின், மகள் மால்டி மேரி புகைப்படம் முதல் முறையாக வெளியாகி இணையத்தையே கலக்கி வருகிறது.

PREV
16
செம்ம கியூட்... முதல் முறையாக வெளியான பிரியங்கா சோப்ரா மகள் மால்டி மேரி புகைப்படம்! குவியும் லைக்ஸ்!

பிரியங்கா சோப்ரா முதல் முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய மகள் மால்டி மேரியுடன் கலந்து கொண்டபோது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக பிரியங்கா சோப்ரா தன்னுடைய மகள் முகத்தை வெளிக்காட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

26

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து, திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய கணவருடன் அமெரிக்காவில் குடியேறிய பிரியங்கா சோப்ரா. கடந்த ஆண்டு வாடகை தாய்முறையில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் ஏன்? வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றெடுத்தேன் என்பதையும் சமீபத்தில் தெரிவித்தார்.

பட்டி வேஷ்டி... சட்டையில் படு ஜோராக குடும்பத்துடன் 33-ஆவது வருட திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த்!

36

இது குறித்து அவர் கூறியதாவது, தனக்கு மருத்துவ ரீதியாக சில பிரச்சனைகள் இருந்ததாகவும்,  இதன் காரணமாகவே வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

46

குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகியும், தற்போது வரை பிரியங்கா சோப்ரா தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை ரசிகர்களுக்கு காட்டாத நிலையில், தற்போது பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட மால்டியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சவுந்தர்யாவின் மறுபிறவியோ... அச்சு அசல் அவரை போலவே இருக்கும் பெண்ணின் புகைப்படங்கள் வைரல்!

56

பிரியங்கா சோப்ராவின் கணவரான நிக் ஜோனஸ் பிரதர்ஸ், அவர்களின் மனைவிகளோடு கலந்து  தி ஹாலிவுட் வாக் ஆப் ஃபேம் ஸ்டார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு தான் தற்போது பிரியங்கா சோப்ரா தன்னுடைய மகள் மால்டியுடன் கலந்து கொண்டார்.

66

முதல் முறையாக பிரியங்கா சோப்ரா, மகளுடன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், ரசிகர்களுக்கு மகளின் புகைப்படத்தையும் காட்டியுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் மகளை கையில் ஏந்தி கொஞ்சியபடி இருக்க, மால்டியின் அழகும், குறும்பு தனமும் அனைவரையும் கவர்ந்தது.

மருத்துவ மனையில் பரிதாபமாக சிகிச்சை பெரும் இலியானா..! என்ன ஆச்சு..?

click me!

Recommended Stories