தமிழ் சினிமாவில் தற்போது தளபதி 67 பற்றி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், தளபதி 67 படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளது. நேற்று இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், இன்று இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை தொடர்ந்து வெளியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
24
அந்த வகையில், தளபதி 67 படத்தின் மெயின் வில்லன் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் சஞ்சய் தத் தான் தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் சஞ்சய் தத்.
இதுகுறித்த அறிவிப்பு போஸ்டரில், தளபதி 67 கதை கேட்டு சஞ்சய் தத் என்ன சொன்னார் என்பதை பதிவிட்டுள்ளனர். அதன்படி “தளபதி 67 படத்தின் ஒன் லைன் கேட்டதுமே இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இந்த பயணத்தை தொடங்க ஆவலோடு உள்ளேன்” என்று சஞ்சய் தத் சொன்னாராம்.
44
நடிகர் சஞ்சய் தத் கடைசியாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப் 2 படத்தில் ஆதீரா என்கிற கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் அவர் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளதால், இப்படத்தில் அவருக்கு அதேபோன்று பவர்ஃபுல்லான வேடம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.