சென்னை ஏர்போர்ட்டில் இந்த வசதி கூட இல்லையா?... காயத்தோடு காத்திருந்தேன் - நடிகை குஷ்பூ வேதனை பதிவு

Published : Jan 31, 2023, 02:50 PM IST

இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த நடிகை குஷ்பூ, அங்கு கால் வலியால் அவதிப்பட்ட தனக்கு சர்க்கர நாற்காலி கிடைக்க தாமதம் ஆனதாக வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.

PREV
14
சென்னை ஏர்போர்ட்டில் இந்த வசதி கூட இல்லையா?... காயத்தோடு காத்திருந்தேன் - நடிகை குஷ்பூ வேதனை பதிவு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. இவர் தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது பாஜக-வில் உறுப்பினராக இருக்கும் குஷ்பூ, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் நடிகை குஷ்பூவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. காலில் கட்டுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார் குஷ்பூ.

24

இந்நிலையில், வெளியூர் செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த நடிகை குஷ்பூ, அங்கு கால் வலியுடன் இருந்த தனக்கு சர்க்கர நாற்காலி கிடைக்காமல் அவதிப்பட்டதாக வருத்ததுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது அதிருப்தியை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை குஷ்பூ.

இதையும் படியுங்கள்... ‘இந்தியன் 2’ ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கெத்தாக ஹெலிகாப்டரில் வந்திறங்கிய கமல்ஹாசன் - மாஸ் வீடியோ இதோ

34

அதில், ஏர் இந்தியா நிறுவனத்தின் பெயரை டேக் செய்து, முழங்காலில் காயம் ஏற்பட்ட பயணியை அழைத்து செல்ல தேவைப்படும் சர்க்கர நாற்காலி கூடவா உங்களிடம் இல்லை. இதற்காக நான் அரை மணிநேரம் கால் வலியுடன் காத்திருந்தேன். அதன் பின்னர் வேறு ஒரு விமான நிறுவனத்திடம் இருந்து சர்க்கர நாற்காலியை வாங்கி வந்து என்னை அழைத்து சென்றனர் என பதிவிட்டிருந்தார்.

44

இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம், இதற்காக நடிகை குஷ்பூவிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், இந்த விவகாரம் உடனடியாக சென்னை விமான நிலைய குழுவுக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் அந்நிறுவனம் டுவிட்டரில் பதிலளித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... 42 வயதில் கோலிவுட் மெர்லின் மன்றோவாக மாறிய வனிதா விஜயகுமார்! இளம் நடிகைகளை கவர்ச்சியில் ஓரம் கட்டிய ஹாட் போஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories