80-பது மற்றும் 90-களில் தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திர நடிகராக இருந்தவர் விஜயகாந்த். குறிப்பாக 90-களில் இவர் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், கோவில் காளை, செந்தூரப்பாண்டி, சேதுபதி ஐபிஎஸ், போன்ற பல படங்கள் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி பிளாக்பஸ்டர் வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.