இதைத் தொடர்ந்து மீண்டும் அஜித் நயன்தாரா இணைந்து நடித்த 'விஸ்வாசம்' படத்திலும் இரண்டாவது முறையாக அஜித்துக்கு மகளாக நடித்தார். இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு மகளாக 'மாமனிதன் படத்திலும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, மா என்கிற குறும்படத்தில் பள்ளி நாட்களில் கர்ப்பமாகும் கதாபாத்திரத்தில் நடித்து அதிர்ச்சி கொடுத்த அனிகா, ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'குயின்' வெப் சீரிஸிலும் சிறிய வயது ஜெயலலிதாவாக நடித்திருந்தார். மேலும் மலையாளத்திலும், மம்மூட்டி, மோகன்லால், ஜெயராம், போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.