பாடகி அனிதா குப்புசாமிக்கு பிறந்த ஆண் குழந்தை... டாக்டர்கள் செய்த தவறால் ஒரே நாளில் உயிரிழந்த பரிதாபம்

Published : Mar 14, 2023, 01:20 PM IST

நாட்டுப்புற பாடகியாக சிறந்து விளங்கி வரும் அனிதா குப்புசாமி, தனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து இறந்துபோன அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

PREV
14
பாடகி அனிதா குப்புசாமிக்கு பிறந்த ஆண் குழந்தை... டாக்டர்கள் செய்த தவறால் ஒரே நாளில் உயிரிழந்த பரிதாபம்

நாட்டுப்புற பாடல்கள் பாடி பேமஸ் ஆனவர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் அனிதா குப்புசாமி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவரும் ஒரு நாட்டுப்புற பாடகர் தான். திருமணத்துக்கு பின்னர் இருவரும் சேர்ந்து பல்வேறு இசைக்கச்சேரிகளை நடத்தி வந்தனர். இந்தியா மட்டுமின்றி உலகளவில் இசைக்கச்சேரிகளை நடத்தியதன் காரணமாகவே இவர்களால் அதிகளவில் சினிமாவில் பாட முடியாமல் போனது.

24

நாட்டுப்புற இசையில் மட்டுமலாமல் புஷ்பவனம் குப்புசாமி - அனிதா தம்பதிக்கு தோட்டக்கலையிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. இதன் காரணமாக தங்கள் வீட்டிலேயே பிரம்மாண்டமாக மாடித்தோட்டம் அமைத்து அதை யூடியூப்பில் வீடியோவாக வெளியிட்டு அதன் மூலமும் வேறலெவலில் டிரெண்ட் ஆகிவிட்டனர். புஷ்பவனம் குப்புசாமி - அனிதா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 

இதையும் படியுங்கள்... இதுக்கு போய் ஆஸ்காரா... 80 கோடி செலவு பண்ணிதான் வாங்கிருக்காங்க! விமர்சனங்களுக்கு விளக்கம் தந்த ஜேம்ஸ் வசந்தன்

34

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து இறந்துபோன தகவலை வெளியிட்டு உள்ளார் அனிதா குப்புசாமி. அதில் அவர் கூறியதாவது : “எனக்கு முதலில் பல்லவி என்கிற பெண் குழந்தை பிறந்துவிட்டார். இரண்டாவது ஆண் குழந்தை வேண்டும் என்று, அடிக்கடி சாமியிடம் வேண்டிக்கொள்வேன். அதன்படி இரண்டாவதாக எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை ரொம்ப அழகா இருந்தது. கலர்னா கலரு அப்படி ஒரு கலரு.

44

சிசேரியன் செய்து தான் அந்த குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த 24 மணிநேரத்துக்குள்ளேயே அந்த குழந்தை இறந்துவிட்டது. மருத்துவர்கள் தவறான ஊசி போட்டதால் நெஞ்செல்லாம் எரிஞ்சி, அந்த குழந்தை இறந்துவிட்டது என கண்கலங்கியபடி தெரிவித்தார் அனிதா. கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ள அனிதா குப்புசாமி, தான் கடவுளிடம் இன்னொரு குழந்தை வேண்டும் என வேண்டி கேட்டுக் கொண்டதால் தனக்கு அம்பாள் இரண்டாவதாக அழகான பெண் குழந்தையை கொடுத்ததாக பேசி உள்ளார். அனிதா குப்புசாமியின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... கர்ப்பமாக இருந்த சமந்தாவை இப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணினாரா நாக சைதன்யா? - பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்

click me!

Recommended Stories