போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். சிம்பு நாயகனாக நடித்த இப்படத்தில் வரலட்சுமி ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் கடந்த 2012-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதையடுத்து மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் விக்கி இயக்கத்தில் வெளிவந்த படம் நானும் ரெளடி தான். இப்படத்தின்போது தான் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இந்த ஆண்டு அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், திடீரென கதை பிடிக்காத காரணத்தால் அவரை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டனர். இதனால் கடும் அப்செட்டில் இருந்த விக்னேஷ் சிவன், தற்போது தான் அதிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது அவருக்கு தலைவலி தரும் விதமாக மேலும் ஒரு பிரச்சனை வந்துள்ளது.
விக்னேஷ் சிவன் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். அவருக்கு டுவிட்டரில் கிட்டத்தட்ட 2 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர். இந்த நிலையில், தற்போது அவரது டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்து உள்ளனர். அதில் சர்கிள் என பெயரையும் மாற்றி உள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்கி யார் இந்த சர்க்கிள் என கேள்வி எழுப்பி தன்னுடைய டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்துவிட்டதாகவும், இதைப் பார்க்கும்போது பயமாகவும், மிகவும் எரிச்சலாகவும் இருப்பதாக கோபத்துடன் பதிவிட்டுள்ளார் விக்கி.
இதையும் படியுங்கள்... ரோலெக்ஸ் ரேஞ்சுக்கு செம்ம மாஸான வில்லனாக அஜித்தை நடிக்க வைக்க பிளான் போடும் பிரபலம்... ஓகே சொல்வாரா ஏகே?