நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து ஏகே 62 படத்தில் நடிக்க தற்போது வெறித்தனமாக தயாராகி வருகிறார் அஜித். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளாராம். தற்போது ஏகே 62 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.
இதனிடையே நடிகர் அஜித்தை ஷங்கர் இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக தயாராகி வரும் ஆர்.சி.15 படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக ஒரு தகவல் கோலிவுட்டில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ஆர்.சி.15 படத்தில் ராம்சரண் நாயகனாக நடிக்கிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கியாரா அத்வானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் நிலையில், தற்போது அஜித்தை என்ன கேரக்டரில் நடிக்க அணுகியுள்ளார்கள் என்கிற தகவலும் வெளிவந்துள்ளது.
இதையும் படியுங்கள்... இளையராஜாக்கு போட்டியா இறக்கிவிடப்பட்ட 2 குதிரைகளும் ஆஸ்கர் அடிச்சிருச்சு! ARR, கீரவாணிக்கு இப்படிஒரு ஒற்றுமையா
அதன்படி ஆர்.சி.15 படத்தில் அஜித்தை செம்ம மாஸ் ஆன வில்லனாக நடிக்க வைக்க ஷங்கர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் இடம்பெற்ற ரோலெக்ஸ் கதாபாத்திரம் போல் அஜித்திற்கும் செம்ம பவர்புல்லான ஒரு ரோலை தயார் செய்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கு அஜித் ஓகே சொல்வாரா என்பது தான் சந்தேகமாக உள்ளது.
ஏனெனில் தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் அஜித், வில்லனாக நடிக்க சம்மதிப்பது கடினம் தான் என்பதே கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. மறுபுறம் வாலி, மங்காத்தா போன்ற திரைப்படங்களில் நடிகர் அஜித் வில்லன் கேரக்டரில் மிரட்டி இருந்ததால், இதிலும் அவர் நடிக்க சம்மதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. ஷங்கரின் அழைப்பை ஏற்று ஆர்.சி 15-ல் நடிக்க ஓகே சொல்வாரா ஏகே என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... குஷி ஜோதிகாவுக்கு போட்டியா? கருப்பு சேலையில் எலுமிச்சை நிற இடையை காட்டிய கீர்த்தி சுரேஷை சொக்கி போன ரசிகர்கள்