கர்ப்பமாக இருந்த சமந்தாவை இப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணினாரா நாக சைதன்யா? - பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்

Published : Mar 14, 2023, 11:54 AM ISTUpdated : Mar 14, 2023, 11:59 AM IST

நாக சைதன்யா கருக்கலைப்பு செய்யச் சொல்லி டார்ச்சர் பண்ணியதால் தான் நடிகை சமந்தா விவகாரத்து பெற்று பிரிந்ததாக பிரபலம் ஒருவர் பகீர் தகவலை வெளியிட்டு உள்ளார்.

PREV
14
கர்ப்பமாக இருந்த சமந்தாவை இப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணினாரா நாக சைதன்யா? - பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சமந்தா. இப்படத்தின் போதே இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

24

இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் நடிகை சமந்தா, சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்தார். உருகி உருகி காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி 4 ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையும் படியுங்கள்... இதுக்கு போய் ஆஸ்காரா... 80 கோடி செலவு பண்ணிதான் வாங்கிருக்காங்க! விமர்சனங்களுக்கு விளக்கம் தந்த ஜேம்ஸ் வசந்தன்

34

சமந்தா - நாக சைதன்யாவின் விவாகரத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதில் எது உண்மை என்பதை இதுவரை சமந்தா தரப்பும், நாக சைதன்யா தரப்பும் வெளியிட வில்லை. இந்நிலையில், பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய விமர்சகராக வலம் வந்து கொண்டிருக்கும் உமர் சந்து சமந்தாவின் விவாகரத்து குறித்து டுவிட் ஒன்றை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

44

அதில் “சமந்தாவை பொறுத்தவரை நாகசைதன்யா மிகவும் மோசமான கணவர் என்றும் அவரால் உடலளவிலும், மனதளவிலும் சமந்தா டார்ச்சரை அனுபவித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சமந்தா கர்ப்பமாக இருந்ததாகவும், நாக சைதன்யா செய்த தொல்லையால் கருக்கலைப்பு செய்துகொண்டதாகவும் உமர் சந்து தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார். அவரின் இந்த பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருளாக மாறி உள்ளது.

இதையும் படியுங்கள்...  எனக்குன்னே வருவீங்களாடா..! விக்னேஷ் சிவனை விடாது கருப்பாய் துரத்தும் பிரச்சனைகள்... இப்போ என்ன ஆச்சு தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories