நடிகை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி, மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்தில் திரையுலகை சேர்ந்த மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்கள், நண்பர்கள், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் யாரும் செல் போன், கேமரா போன்றவற்றை உபயோகிக்க கூடாது, என்கிற வேண்டுகோள் ஒன்றையும் நயன் - விக்கி தரப்பில் இருந்து முன் வைத்திருந்தனர்.
மேலும் செய்திகள்: முன்னணி நடிகையை காதல் வலையில் வீழ்த்தினரா சித்தார்த்..?
இதற்கு முக்கிய காரணம், நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி தங்களுடைய திருமண நிகழ்வுகளை படம் பிடிக்கும் உரிமையை நெட்பிக்ஸ் நிறுவனத்திற்கு ரூபாய் 25 கோடிக்கு வழங்கியது தான். ஆனால் நெட்டபிளிக்ஸ் ஒப்பந்தத்தை மீறும் விதமாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, சில திருமண புகைப்படங்களை வெளியிட்டதால் இந்த ஒப்பந்தத்தை நெட்டபிலிக்ஸ் நிறுவனம் ரத்து செய்ய உள்ளதாக ஒரு தகவலும் வெளியானது.
இந்நிலையில் இன்று, நெட்பிளிக்ஸ் இணையதளம், நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ப்ரீ வெடிங் போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
விக்கி பார்ம் பேன்ட் - ஷர்ட் அணிந்துள்ளார். நயன்தாரா மிகவும் எளிமையாக சிம்பிள் மேக்கப்பில் வெள்ளை நிறத்தில் பட்டு கரை பொருந்திய டிஷு சாரீ அணிந்துள்ளார்.