வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ரூத்,பிரிகிடா சாகா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படம் சுயதீன திரில்லர் திரைப்படம் என்று கூறப்படுகிறது. நாயகன் தனது வாழ்வில் நடந்த இன்னல்கள் குறித்து சித்தரிப்பதாக இந்த படம் உருவாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..ஸ்டைல் வாக் போட்ட விஜய்..வாரிசு சூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை லீக் செய்த ரசிகர்கள்..
காவல்துறையிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் கதாநாயகன் முதலில் ஒரு போலி சாமியாரின் ஆசிரமம் மற்றும் பழடைந்த மண்டபத்தில் தஞ்சம் அடைகிறார். அந்த மண்டபத்தில் இருந்தபடி தன் வாழ்வில் நடந்தவற்றை சிந்திக்கும் கதைகளத்தை இந்த படம் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 70 ஏக்கர் நிலப்பரப்பில் 56க்கும் மேற்பட்ட செட்கள் அமைக்கப்பட்டு ஒரே நேரத்தில் இந்த படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. 90 நாட்கள் ஒத்திவைக்கப் பிறகு உருவாகியுள்ளது இரவின் நிழல்.