இந்நிலையில் அண்மையில் நடிகை ஸ்ரீநிதி தன்னை திருமணம் செய்துகொள்ளக் கோரி நடிகர் சிம்பு வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீநிதியின் இந்த பதிவை தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் இணையத்தில் எழுந்தது. தொடர்ந்து, சில நாட்கள் கழித்து சீரியல் நடிகை நட்சத்திரா உயிருக்கு ஆபத்து என வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அதனை தொடர்ந்து அவரது அம்மா, ஸ்ரீநிதி டிப்ரஷனில் இருப்பதாலே இப்படியெல்லாம் பேசுவதாகவும், அவரை யாரும் திட்ட வேண்டாமென்றும் கோரிக்கை வைத்திருந்தார்.