முன்னணி நடிகையை காதல் வலையில் வீழ்த்தினரா சித்தார்த்..?

First Published | Jul 20, 2022, 10:57 PM IST

நடிகர் சித்தார்த் தற்போது பிரபல முன்னணி நடிகை ஒருவருடன் டேட்டிங் செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இருவரும் ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை அதிதி ராய்.

இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்', படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இவர் நடித்த 'ஹே சினாமிகா' படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் செய்திகள்: பார்த்து கழண்டு விழுந்துட போகுது... ஸ்ட்ராப் லெஸ் உடையில் கவர்ச்சி காட்டும் ஜான்வி கபூர்! லேட்டஸ்ட் போட்டோஸ்!
 

Tap to resize

இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில், தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதிலும், சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் பதிவுகளை போட்டு பரபரப்பை ஏற்படுத்தும் நடிகருமான சித்தார்த்தை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: Exclusive Photos: நான் தமிழன்டா.. ஹாலிவுட் பட புரோமோஷனுக்கு வேஷ்டி - சட்டையில் வந்து கெத்து காட்டிய தனுஷ்!
 

இவர்கள் இருவரும் 'மஹாசமுத்திரம்' என்கிற தெலுங்கு படத்தில் நடித்த போது ஏற்பட்ட பழக்கம் இப்போது காதலாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அவ்வபோது இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், மும்பையில் உள்ள ஹோட்டலில் இவர்கள் வெளியேறி ஒரே காரில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: இதுக்கு பேர் ஃபேஷனா? முகம் சுழிக்க வைத்த உர்ஃபி ஜாவேத்தின் கன்றாவியான உடை! லேட்டஸ்ட் போட்டோஸ்..
 

இருப்பினும் சித்தார்த் மற்றும் அதிதிராவ் ஆகிய இருவரும் தாங்கள் டேட்டிங் செய்வதாகவோ காதலிப்பதாகவோ இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் சித்தார்த்தின் பிறந்தநாளின் போது அதிதிராவ் ஹைத்ரி தனது சமூக வலைதள பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

Latest Videos

click me!