கோலிவுட்டில் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தற்போது பன் மொழி நடிகராக உருவெடுத்து விட்டார். பாலிவுட் திரையுலகில் இவர் நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த பின்னர் ஹாலிவுட்டிலும் வெற்றி கொடி நாட்டினார்.
தனுஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ‘தி இன்கிரிடிபில் ஜர்னி ஆஃப் ஃபகீர்’ படம் மூலம் அவருக்கு சிறந்த அறிமுகமான படமாக மட்டும் அமையாமல் சில விருதுகளையும் பெற்று தந்தது.
இப்படத்தில் நடிகர் தனுஷ் அவிக் சான் என்கிற மாஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் கிரிஸ் எவான்ஸ், ரியான் காஸ்லிங், ஜூலியா பட்டர்ஸ், அனா டி அர்மாஸ் போன்ற ஹாலிவுட் நடிகர், நடிகைகளும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற இப்படத்தின் பிரீமியர் ஷோ திரையிடலில் நடிகர் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா உடன் கலந்துகொண்டார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரல் ஆகின.
ஏற்கனவே இந்த படத்தின் பிரீமியர் ஷோ அமெரிக்காவில் நடந்த போது, செம்ம கெத்தாக... மகன்களுடன் கோட்டு - சூட்டில் மாஸ் காட்டிய தனுஷ், மும்பையில் தான் ஒரு தமிழன் என்பதை நிரூபித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தனுஷ் வேஷ்டி சட்டையில் கலந்து கொண்ட exclusive புகைப்படங்கள் இதோ... எத்தனை மாடர்ன் உடைகள் அணிந்தாலும்... தமிழரின் பாரம்பரியமான இந்த உடைக்கு ஈடாகுமா?