திரையுலகை பொறுத்தவரை ஹீரோக்கள் 50 கோடி, 100 கோடி என சம்பளம் வாங்கினாலும் ஹீரோயின்களுக்கு அதிக பட்சமாக 5 கோடி கொடுப்பதே பெரிய விஷயம். அதிலும் 3 கோடியை தாண்டி நடிகைகள் சம்பளம் வாங்கினால் அது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் சமீப காலமாக ஹீரோயின் சப்ஜெட் படங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகைகள் ஹீரோக்களுக்கு சளைத்தவர்கள் நாங்கள் அல்ல என சம்பள விஷயத்தில் கறார் காட்டி வருகிறார்கள். அப்படி பட்ட நடிகைகள் யார் யார் என பார்க்கலாம்.
நயன்தாரா:
கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்துடன் வலம் வரும் இவர், மலையாள திரையுலகில் இருந்தது தமிழ் சினிமாவிற்கு வந்தவர். முதல் படத்திலேயே சரத்குமாருக்கும், இரண்டாவது படத்தில் ரஜினிகாந்துக்கும் ஜோடி போட்டு குறுகிய காலத்தில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடி போட்டார். இவரின் கால்ஷீட் தான் வேண்டும் என, காத்துக்கிடந்த நடிகர்களும் உள்ளனர். ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை தாண்டி, கதையின் நாயகியாகவும் நடித்து வரும் நயன்தாரா 5- 7 கோடி வரை தன்னுடைய படங்களுக்கு சம்பளமாக கேட்கிறார். தற்போது பாலிவுட் திரையுலகிலும் நுழைந்துள்ளதால், 10 கோடிக்கு ரூட் போட்டு வருகிறாராம்.
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சிக்காக கமல் ஹாசனுடன் கை கோர்த்த இயக்குனர் எச்.வினோத்!
ஐஸ்வர்யா ராய்:
50 வயதை கடந்த பின்னரும் இவங்களுக்கு இருக்கும் வரவேற்பு வேற லெவல். பாலிவுட் திரையுலகில் தேடப்படும் ஹீரோயினாக இருந்தாலும், கதை பிடித்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார் ஐஸ்வர்யா ராய். இவர் தமிழில் சமீபத்தில் நடித்திருந்த பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடிக்க 10 கோடி வரை சம்பளமாக பெற்றாராம். அந்த படத்தில் நடித்த நடிகைகளில் இவருக்கு தான் இவ்வளவு பெரிய தொகை சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குந்தவை த்ரிஷா:
நயன்தாராவுக்கு நிகராக சுமார் 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக மட்டுமே நடித்து வரும் த்ரிஷா. கடந்த 5 வருடங்களாக சரியான பட வாய்ப்பு மற்றும் வெற்றி கொடுக்க முடியாமல் திணறி வந்த நிலையில், பொன்னியின் செல்வன் ஹிட்... இவரின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியுள்ளது. குந்தவையின் அழகில் கவர்த்திழுக்கப்பட்ட விஜய், அஜித் ஆகியோர் கூட இளம் நடிகைகளை டீலில் விட்டு விட்டு 40 வயதான த்ரிஷாவுடன் ஜோடி போட ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த ஆர்வத்தை தனக்கு சாதகமாக பயன் படுத்திகொண்டு த்ரிஷா, இதுவரை 2 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த நிலையில், இப்போது அப்படியே டபுள் மடங்காக 4 முதல் 5 கோடி வரை கேட்கிறாராம்.
கண்ட இடத்தில் கை வைத்து.. ஐஸ்வர்யா ராய்யிடம் பளார் வாங்கிய தமிழ் நடிகர்? இவரா... அவரா... ஆராயும் நெட்டிசன்கள்!
சமந்தா:
திருமணமாகி, விவாகரத்தான பிறகும் கொஞ்சம் கூட... மவுசு குறையாத நாயகியாக இருப்பவர் சமந்தா தான். நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகள் நடிக்க தயங்கும், சர்ச்சை காட்சிகள் மற்றும் அதிரடி காட்சிகளில் கூட தன்னுடைய சக்தியை மீறி சாதித்து காட்டுபவர். குறிப்பாக 'பேமிலி மேன்' வெப் தொடரில் இவர் டூப் போடாமல் நடித்த சண்டை காட்சிகள் பாராட்டை பெற்றது. அதே போல் சூப்பர் டீலக்ஸ் படத்தில் இவர் நடித்த போல்டான கதாபாத்திரத்துக்கு தேசிய அளவிலான ஊடகங்களே புகழ்ந்து தள்ளியது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சாகுந்தலம் தோல்வியை தழுவினாலும், சம்பள விஷயத்தில் கறாராக இருக்கிறாராம். 5 கோடி வரை சம்பளம் பெற்ற சமந்தா... ஹாலிவுட் வரை சென்று விட்டதால், 8 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம்.
கீர்த்தி சுரேஷ்:
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கலக்கி வரும் தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ், முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் சம்பவம் குறைவாக இருந்தாலும் ஓகே சொல்கிறார். அதே போல் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் இவர், 3 - 5 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். கதை பிடித்திருந்தால் சில கோடிகளை தளர்த்தி கொள்ளவும் தயார் என்று சொல்லும் அளவுக்கு கீர்த்தி கொஞ்சம் பக்குவமான நடிகை என்பது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல் எனலாம். தன்னுடைய தந்தையும் ஒரு தயாரிப்பாளர் என்பதால்... அவர்களின் கஷ்ட நஷ்டத்தை புரிந்து செயல்படுவதாக திரை வட்டாரத்தில் ஒரு பேச்சு.
சிவகார்த்திகேயன் - அதிதி ஷங்கர் பாடிய 'மாவீரன்' படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ராஷ்மிகா மந்தனா:
திரையுலகில் அடியெடுத்து வைத்த வேகத்தில், நேஷ்னல் கிரஷ் என்கிற அளவுக்கு ரசிகர்கள் மனதை கவர்ந்து விட்ட ராஷ்மிகா... கதைக்கு தேவை என்றால், எந்த அளவுக்கு கவர்ச்சி காட்டவும் தயார் என ஓப்பனாக கூறுவதோடு, சம்பள விஷயத்தில் மட்டும் குறைக்க வேண்டும் என கூறக்கூடாது என ஆரம்பத்திலேயே கூறி விட்டு தான் கதையே கேட்கிறாராம். சினிமாவில் நுழைந்த போது சில லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கிய அம்மணி இப்போது 5 கோடிக்கு குறைவில்லாமல் சம்பளம் பெறுகிறார்.