ஐஸ்வர்யா ராய், 1994-இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இவருக்கு கிடைத்த இந்த அழகி பட்டம் தான் இவர் திரையுலகின் உள்ளே நுழைய காரணமாகவும் அமைந்தது. உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய்யை, நடிகையாக அறிமுகம் செய்த பெருமை, இயக்குனர் மணிரத்னத்தை தான் சேரும். அந்த வகையில், எம்.ஜி.ஆர் - கலைஞர் கருணாநிதி வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட, 'இருவர்' படத்தில், ஜெயலலிதாவை பிரதிபலிக்கும் வேடத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராய்.