பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள திரைப்படம் ஆதிபுருஷ். ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்துள்ளார். ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளார். அதேபோல் படத்தில் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரமான ராவணன் கேரக்டரில் பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்திருக்கிறார்.
ஆதிபுருஷ் திரைப்படம் சுமார் 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இப்படம் வருகிற ஜூன் 16-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அதற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஆதிபுருஷ் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி அண்மையில் திருப்பதியில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் ஏராளமான ரசிகர்களும் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்... காஸ்ட்லி பைக்-ல வந்து செருப்ப திருடிட்டு போறாங்க... என்ன கொடுமை சார் இது - புலம்பிய மாஸ்டர் பட நடிகை
இந்த நிகழ்ச்சியின் போது படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு இருந்தது. அதன்படி ஆதிபுருஷ் படம் திரையிடப்படும் அனைத்து திரையரங்குகளிலும் ஒரு இருக்கை மட்டும் காலியாக விடப்படும் என்றும், அந்த இருக்கை அனுமனுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் படக்குழு அறிவித்தது. ஆதிபுருஷ் படக்குழுவின் இந்த அறிவிப்பு பாராட்டுக்கள் கிடைத்தாலும், மறுபுறம் இதனை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கடுமையாக ட்ரோல் செய்தும் வந்தனர்.
இந்த நிலையில், ஆதிபுருஷ் படக்குழு அறிவித்த அனுமன் இருக்கை குறித்து சர்ச்சை ஒன்றும் வெடித்தது. அதன்படி அந்த இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கைகள் மட்டும் அதிக தொகைக்கு திரையரங்குகளில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், படக்குழுவே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அதன்படி அனுமன் இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்கிற தகவலில் துளியும் உண்மையில்லை என கூறி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... தந்தைக்கு டஃப் கொடுக்க ரெடியான கதீஜா... இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரகுமான் மகள்