கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சினிமாவில் கலக்கிய நடிகைகள் ஏராளம். நயன்தாரா தொடங்கி மாளவிகா மோகனன் வரை இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், அந்த பட்டியலில் புதுவரவாக இணைந்துள்ளவர் தான் அஞ்சலி நாயர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த நெடுநல்வாடை திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார்.
நெடுநல்வாடை படத்தை தொடர்ந்து அஞ்சலி நாயர் நடித்த திரைப்படம் தான் டாணாக்காரன். தமிழ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அஞ்சலி நாயர். கடந்தாண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதில் போலீஸாக நடித்திருந்தார் அஞ்சலி நாயர்.
நடிகை அஞ்சலி நாயர் தற்போது விஜய் சேதுபதி உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு படத்திலும் நடிக்கும் வாய்ப்பு நடிகை அஞ்சலிக்கு வந்தது. அப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் என சொன்னதால், அப்படி ஒரு பட வாய்ப்பே வேண்டாம் என தூக்கி எறிந்துவிட்டார் அஞ்சலி நாயர்.