நயன்தாரா முதல் ராஷ்மிகா வரை... சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா?

Published : Feb 22, 2023, 12:35 PM IST

நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா, திரிஷா, ராஷ்மிகா என தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நடிகைகள் என்னென்ன டிகிரி முடித்துள்ளார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
110
நயன்தாரா முதல் ராஷ்மிகா வரை... சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா?

நயன்தாரா

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, B.A english படித்துள்ளார். இவர் கேரளாவில் உள்ள மார்த்தோமா கல்லூரியில் தான் படித்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்த பின் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய நயன்தாரா, பின் தனது விடாமுயற்சியால் வெற்றிகண்டு இன்று டாப் ஹீரோயினாக வளர்ந்துள்ளார்.

210

சமந்தா

நடிகை சமந்தா தமிழ்நாட்டு பொண்ணு என்பது நாம் அனைவரும் அறிந்தது. அவர் பிறந்து வளர்ந்து கல்லூரி படிப்பை முடித்தது எல்லாமே சென்னையில் தான். இவர் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தான் காமர்ஸ் படித்துள்ளார். தற்போது நடிகை சமந்தா பான் இந்தியா அளவில் கலக்கி வருகிறார்.

310

அனுஷ்கா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, BSc Computer Science படித்துள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள மெளண்ட் கேரமல் என்கிற கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அதன்பின் சினிமாவில் எண்ட்ரி கொடுத்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார் அனுஷ்கா.

410

திரிஷா

தென்னிந்திய திரையுலகின் இளவரசியாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை திரிஷா, சென்னை எதிராஜ் கல்லூரியில் BBA படித்துள்ளார். இதன்பின் மாடலிங் துறையில் கவனம் செலுத்திய திரிஷா மிஸ் சென்னை பட்டத்தையும் கடந்த 1999-ம் ஆண்டு வென்றார். தற்போது இவர் லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

510

காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வாலை பிரபலமாக்கிய தென்னிந்திய திரையுலகமாக இருந்தாலும் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். கல்லூரி படிப்பையும் மும்பையில் தான் முடித்துள்ளார் காஜல். இவர் மும்பையில் உள்ள கிஷன்சாந்த் செல்லாரம் கல்லூரியில் மாஸ் மீடியா படித்துள்ளார். 

இதையும் படியுங்கள்... தட்டிவிட்டா தாறுமாறு... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த துணிவு படத்தின் சில்லா சில்லா வீடியோ சாங் இதோ

610

ராஷ்மிகா மந்தனா

ரசிகர்களால் நேஷனல் கிரஸ் என செல்லமாக அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை செம்ம பிஸியான ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் பெங்களுருவில் உள்ள எம்.எஸ்.ராமையா கல்லூரியில் B.A (Psychology, Journalism and English Literature) படித்துள்ளார்.

710

சாய் பல்லவி

பிரேமம் என்கிற மலையாள படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தவர் சாய் பல்லவி. இவரும் தமிழ் பெண் தான். இவரது சொந்த ஊர் கோயம்புத்தூர். தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி, ஒரு மருத்துவர் ஆவார். இவர் ஜார்ஜியாவில் தனது டாக்டர் படிப்பை முடித்தார்.

810

கீர்த்தி சுரேஷ்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் கல்லூரி படிப்பை முடித்தது சென்னையில் தான். இவர் சென்னையில் உள்ள பியர்ல் அகாடமியில் B.A பேஷன் டிசைனிங் படித்துள்ளார். இதையடுத்து சினிமாவில் நடிக்கத் தொடங்கிய கீர்த்தி, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

910

மாளவிகா மோகனன்

தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் மாளவிகா மோகனன். இவர் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை மாளவிகா மோகனன் மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில் மாஸ் மீடியா படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1010

பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமாவில் கைவசம் டஜன் கணக்கிலான படங்களுடன் செம்ம பிசியான ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி ஆவார். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள பி. எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் பொறியியல் கல்லூரியில் முடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... மயில்சாமியை தொடர்ந்து... பிரபல காமெடி நடிகை திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

Read more Photos on
click me!

Recommended Stories