கிளாமர் அள்ளுதே... தாராள கவர்ச்சியில் தாறுமாறாக போஸ் கொடுத்த ரெஜினா கசாண்ட்ரா - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

First Published | Feb 22, 2023, 10:23 AM IST

பிரபல தென்னிந்திய நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

கண்ட நாள் முதல் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இதையடுத்து அழகிய அசுரா என்கிற தமிழ் படத்தில் நடித்த இவர், கடந்த 2013-ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இதையடுத்து தெலுங்கில் கவனம் செலுத்த தொடங்கிய ரெஜினா, தமிழில் அவ்வப்போது நடித்து வந்தார். அந்த வகையில் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாநகரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

Tap to resize

இதையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சரவணன் இருக்க பயமேன், அதர்வா உடன் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற திரைப்படங்களில் நடித்தார் ரெஜினா.

பின்னர் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் விஷாலின் சக்ரா திரைப்படம் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்த ரெஜினா, அப்படத்தில் வில்லியாக நடித்து மிரட்டி இருந்தார். அவரது ரோலுக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.

இதையும் படியுங்கள்... வாரிசு முதல் தக்ஸ் வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் படங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ

தற்போது தமிழில் இவர் கைவசம் பார்டர், கருங்காப்பியம், சூர்ப்பனகை ஆகிய திரைப்படங்கள் உள்ளன. இதில் பார்டர் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் ரெஜினா. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மற்ற இரண்டு படங்களும் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

இவ்வாறு தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருக்கும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது, ஜொலி ஜொலிக்கும் தங்க நிற மாடர்ன் கவர்ச்சி உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்து நடிகை ரெஜினா பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து உள்ளன.

இதையும் படியுங்கள்... அனிருத் இல்லை... தனுஷின் 50-வது படத்திற்கு இசையமைக்கப்போவது இவரா? - கசிந்த தகவல்

Latest Videos

click me!