மலையாள திரையுலகில் முன்னணி காமெடி நடிகையாக வலம் வந்தவர் சுபி சுரேஷ். கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர் கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகை சுபி சுரேஷின் மறைவு மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுபி சுரேஷ் சின்னத்திரையில் முதல் முதலில் தொகுத்து வழங்கியது சினிமாலா என்கிற நிகழ்ச்சி தான். ஏசியாநெட் சேனலில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி மூலம் தான அவர் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இதையடுத்து படிப்படியாக முன்னேறி தற்போது மலையாள திரையுலகில் காமெடி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சுபி சுரேஷ், தற்போது திடீரென மரணம் அடைந்து இருப்பது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை சுபி சுரேஷின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாகவே தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழ் திரையுலகில் மயில்சாமி மாரடைப்பால் மரணமடைந்தார், அதேபோல் தெலுங்கு நடிகர் தாரக் ராணாவும் சமீபத்தில் காலமானார். அந்த வரிசையில் தற்போது மலையாள நடிகை சுபி சுரேஷ் மரணமடைந்து இருப்பது மலையாள திரையுலகிற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... வாரிசு முதல் தக்ஸ் வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் படங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ