ஓடிடியில் ரிலீசாகும் தமிழ் படங்கள்
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீசாகி சக்கைப்போடு போட்ட வாரிசு திரைப்படம் இன்று (பிப்ரவரி 22) ஓடிடி-யில் ரிலீசாகி உள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷியாம், சம்யுக்தா, சங்கீதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் இன்று முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகி உள்ளது.
அதேபோல் தமிழில் சந்தீப் கிஷான் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான மைக்கேல் திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வருகிற பிப்ரவரி 24-ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது.
இதுதவிர இருதுருவம் என்கிற வெப்தொடரின் 2-ம் பாகமும் இந்த வாரம் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இந்த வெப் தொடரின் முதல் பாகம் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாம பாகம் தயாராகி உள்ளது. அருண் பிரகாஷ் என்பவர் இயக்கியுள்ள இந்த வெப் தொடரில் பிரசன்னா, நந்தா, அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வெப்தொடர் வருகிற பிப்ரவரி 24-ந் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.
ஓடிடியில் ரிலீசாகும் மற்ற மொழி படங்கள்
மற்ற மொழிகளை பொறுத்தவரை கன்னடத்தில் கிராந்தி திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. அதேபோல் மலையாளத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் நெட்பிளிக்ஸிலும், தங்கம் திரைப்படம் அமேசான் பிரைமிலும் ரிலீசாக உள்ளது. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த வீரசிம்ஹா ரெட்டி திரைப்படம் ஹாட்ஸ்டாரில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... அனிருத் இல்லை... தனுஷின் 50-வது படத்திற்கு இசையமைக்கப்போவது இவரா? - கசிந்த தகவல்
தியேட்டரில் ரிலீசாகும் தமிழ் படங்கள்
தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. பெரும்பாலும் சிறு பட்ஜெட் படங்களே வெளிவர இருக்கின்றன. அதன்படி பிருந்தா மாஸ்டர் இயக்கி உள்ள தக்ஸ் திரைப்படம் வருகிற பிப்ரவரி 24-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
இதுதவிர சிங்கிள் சங்கரும் செல்போன் சிம்ரனும் என்கிற திரைப்படமும் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் சிவா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். விக்னேஷ் ஷா என்பவர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து உள்ளார். இப்படமும் பிப்ரவரி 14-ந் தேதி திரைக்கு வருகிறது.