நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான வாத்தி திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியான மூன்றே நாட்களில் ரூ.51 கோடி வசூலித்து சாதனை படைத்து இருந்தது. வாத்தி படத்தின் வெற்றிக்கு பின்னர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து தனுஷ் தனது 50-வது படத்திற்கான பணிகளை தொடங்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகிவிட்டது. அதோடு இப்படத்தை நடிகர் தனுஷ் தான் இயக்க உள்ளாராம். ஏற்கனவே பா பாண்டி என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ள தனுஷ், இப்படம் மூலம் மீண்டும் இயக்குனராக களமிறங்க உள்ளார். இப்படத்தில் தனுஷ் உடன் எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணு விஷால் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்களாம்.
இதையும் படியுங்கள்... புரோமோ ஷூட்டில் சிம்பு இல்லாதது ஏன்?... STR-ஐ புறக்கணிக்கிறதா பத்து தல டீம்? - சர்ச்சைக்கு இயக்குனர் விளக்கம்
இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி தனுஷின் 50-வது படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த மரியான், ராஞ்சனா மற்றும் அட்ரங்கி ரே போன்ற படங்களுக்கு இசையமைத்து இருந்தார். தற்போது டி50 படம் மூலம் தனுஷ் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி 4-வது முறையாக கூட்டணி அமைக்க உள்ளது.