நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் பத்து தல. கன்னடத்தில் ஷிவ ராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன முஃப்டி என்கிற திரைப்படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் நடிகர் சிம்பு ஏஜிஆர் என்கிற மாஸான கேங்ஸ்டர் ரோலில் நடித்து இருக்கிறார். இதில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன், டிஜே அருணாச்சலம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது.
பத்து தல படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ஒபிலி என் கிருஷ்ணா இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கியவர் ஆவார். பத்து தல படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. வருகிற மார்ச் 30-ந் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்... நடிகர் பிரபுக்கு நடந்த அறுவை சிகிச்சை! என்ன ஆச்சு மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
இதனிடையே பத்து தல படத்தின் புரோமோ பாடல் படப்பிடிப்பு ஒன்று அண்மையில் படமாக்கப்பட்டது. இதில் நடிகர் கவுதம் கார்த்திக், நடிகை பிரியா பவானி சங்கர், இயக்குனர் ஒபிலி என் கிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாடலாசிரியர் கபிலன் ஆகியோர் கலந்துகொண்டு நடித்தனர். ஆனால் சிம்பு மட்டும் இதில் கலந்துகொள்ளவில்லை. வாரிசு படத்தின் புரோமோ வீடியோவில் நடித்த சிம்பு, அவரது படத்தில் நடிக்காதது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு இயக்குனர் ஒபிலி என் கிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, சிம்பு பத்து தல ஷூட்டிங்கை கடந்த டிசம்பர் மாதமே முடித்துவிட்டதாகவும், நேற்று நடைபெற்ற பாடல் படப்பிடிப்பு கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கருக்கு இடையேயானது. இதில் ஏ.ஆர்.ரகுமானும் கலந்துகொண்டு நடித்தார். எங்களது strategy படி சிம்புவை புரோமோ வீடியோவில் கொண்டுவரவில்லை. அதனால் அவரது பெயரை கலங்கப்படுத்த வேண்டாம். எங்களது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பத்து தல புரமோஷன் பற்றி நன்றாகவே தெரியும்” என குறிப்பிட்டுள்ளார். நடிகர் சிம்பு தற்போது வெளிநாட்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சீமானின் அன்பு தம்பி நான்.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அசீம்! குழப்பத்தில் ரசிக