Published : Feb 21, 2023, 10:46 PM ISTUpdated : Feb 21, 2023, 10:48 PM IST
அஜித் நடிக்க உள்ள 62 ஆவது படம் குறித்து, ரசிகர்கள் மத்தியிலும், சமூக வலைதளத்திலும் அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது இப்படத்தில் இளம் ஹீரோவை ஒருவரை மகிழ் திருமேனி வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாகவும், படத்தின் டைட்டில் எப்போது வெளியாகும் என்கிற தகவலும் கசிந்துள்ளது.
அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான 'துணிவு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நிலையில்... நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியாகி, இலட்சக்கணக்கான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டது.
26
இந்நிலையில் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள 62 ஆவது படம் குறித்த தகவல், அவ்வபோது வெளியாகி வரும் நிலையில், எப்போது இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். காரணம் அஜித்தின் 62 ஆவது படத்தை, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக 'துணிவு' படம் ரிலீஸுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஸ்கிரிப்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதில் இயக்குனர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை வெளியாகவில்லை என்றாலும், மகிழ் திருமேனி தான் இப்படத்தை இயக்க உள்ளது, 90% உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இப்படத்தின் பூஜை நேற்று மிகவும் எளிமையாக நடைபெற்றதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
46
இந்நிலையில் அஜித்துக்கு தரமான வில்லனை மகிழ் திருமேனி தேர்வு செய்வதில், அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவலில் அருண் விஜய் அல்லது இளம் நடிகர் அருள்நிதி அஜித்துக்கு வில்லனாக நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடித்துள்ளார். எனினும் அருள்நிதி நடிப்பது நம்ம லிஸ்டிலேயே இல்லையே? என ரசிகர்கள் இந்த தகவலுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல் கதாநாயகி குறித்த தேர்வும் பரபரப்பாக நடந்து வருகிறது.
66
அஜித் 62 டைட்டில் ரிலீஸ் குறித்து வெளியாகியுள்ள தகவலில், மார்ச் மூன்றாவது வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும், மார்ச் இரண்டாவது வாரத்தில் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல் வெளியாக வாய்ப்புள்ளது.