இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், விறுவிறுப்பாக உருவாகி வரும் 'தங்கலான்' படம் குறித்து அவ்வபோது படக்குழு முக்கிய தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில், இப்படத்தில் இணைந்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் பற்றிய தகவலை தற்போது அறிவித்துள்ளது.
இப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, தற்போது ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் சார்பில், இயக்குனர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும், 'தங்கலான்' படத்தை இயக்கி வருகிறார்.
18 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் உருவாகி வரும் இப்படம் , கே ஜி எஃப் பட பாணியில் தங்கம் எடுக்கும் தொழிலாளர்களை மையப்படுத்தி உருவாகி வருகிறது. தற்போது, இப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு கோலார் தங்க வயல் பகுதியை முகாமிட்டு, விறுவிறுப்பாக படப்பிடிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.