heart attack
பல பிரபலங்கள் தங்களுடைய உடலை ஃபிட்டாக வைத்து கொள்ள வேண்டும் என்பதால், மிகவும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வதையும், உடல் பயிற்சி செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் அப்படி பட்டவர்களும் சமீப காலமாக மாரடைப்பு வருகிறது. சமீபத்தில் மட்டும் மாரடைப்பால் உயிரிழந்த பிரபலங்கள் ஷாக்கிங் பட்டியல் இதோ...
இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான 'பூ' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ராமு. இப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு தந்தையாக எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம்பிடித்தார். நாடகக் கலைஞரான இவர் சூரரை போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த ஜூன் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவர் இறப்பதற்கு ஒரு நாளுக்கு முன்புதான் கொரோனா விழிப்புணர்வு செய்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டார். எனவே இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக சிலர் வதந்தியை கிளப்பிய நிலையில். தடுப்பூசி குறித்து ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழு விவேக்கின் மாரடைப்புக்கும், தடுப்பூசிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை உறுதி செய்தது.
செங்கோட்டை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சி.வி.சசிகுமார் புற்றுநோயிக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.