முதல்முறையாக மகன் அமீனுடன் இணைந்து நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான்! பரபரப்பாக நடக்கும் படப்பிடிப்பு!

Published : Feb 21, 2023, 03:52 PM IST

ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் முதல்முறையாக தன்னுடைய மகன் அமீனுடன்  இணைந்து பிரபல நடிகரின் படத்தில் இடம்பெறும், புரொமோஷன் பாடலில் நடிக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.  

PREV
15
முதல்முறையாக மகன் அமீனுடன் இணைந்து நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான்! பரபரப்பாக நடக்கும் படப்பிடிப்பு!
AR rahman AR rahman

திரையுலகில் மிகவும் பிஸியான இசையமைப்பாளராக வலம்வந்து கொண்டிருப்பவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். ஏற்கனவே,  பிகில் படத்தில் இடம் பெற்ற 'சிங்க பெண்ணே' பாடல், மற்றும் சில ஆல்பம் பாடல்களில் நடித்துள்ள நிலையில், தற்போது தன்னுடைய மகனுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

25

ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன், சமீப காலமாகவே ஆல்பம் பாடல்கள் பாடுவதிலும், இசை அமைப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். எனவே விரைவில் முன்னணி நடிகர் படத்திற்கு, இசையமைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

பக் பக்... மேஜிக் நிகழ்ச்சியில் அந்தரத்தில் நின்று பாடிய பாடகி சித்ரா..! வைரலாகும் வீடியோ..!
 

35

இது ஒரு புறம் இருக்க, தற்போது தன்னுடைய தந்தையுடன் முதல் முறையாக இணைந்து நடிக்க உள்ளார். 'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் கிருஷ்ணா, நீண்ட இடைவேளைக்கு பின்னர் சிம்பு - கௌதம் கார்த்தி ஆகியோரை வைத்து இயக்கி முடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'.
 

45

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படம், மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. எனவே இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில், தற்போது படக்குழுவினர் தீவிரமாக இறங்கி உள்ளனர். குறிப்பாக இப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றின் புரமோஷனின் இசை புயல் ஏ ஆர் ரகுமான், தன்னுடைய மகனுடன் இணைந்து நடிக்க உள்ளாராம்.

எதிர்நீச்சல் ரேணுகாவா இது? 45 வயதில்... டைட்டான நீச்சல் உடையில் கணவரோடு பந்தாவாக போஸ் கொடுத்த டிடி-யின் சகோதரி

55

இதற்கான படப்பிடிப்பு பணிகள் தற்போது சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இது குறித்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி, முதல் முறையாக அமீன் - ஏ ஆர் ரகுமான் காம்பினேஷன் பற்றிய ஆர்வத்தை தூண்டியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories