LCU-வில் இணைகிறாரா அண்ணாச்சி? லெஜண்ட் சரவணன் பதிவிட்ட புகைப்படத்தால் குழம்பிப்போன ரசிகர்கள்

Published : Feb 21, 2023, 02:00 PM IST

லெஜண்ட் சரவணன் காஷ்மீருக்கு சென்றுள்ளதால் அவரும் லியோ படத்தில் நடிக்கிறாரா என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். 

PREV
14
LCU-வில் இணைகிறாரா அண்ணாச்சி? லெஜண்ட் சரவணன் பதிவிட்ட புகைப்படத்தால் குழம்பிப்போன ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது லியோ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்யின் 67ஆவது படமான இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மூணாறில் நடைபெற்றது.

24

லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதமேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. லியோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஒட்டுமொத்த பட குழுவும் கடந்த மாதம் காஷ்மீருக்கு சென்றது.

இதையும் படியுங்கள்... ஐயப்பனுக்கு மாலையை போட்டு... ஆஸ்கர் விருது விழாவுக்காக அமெரிக்காவுக்கு கிளம்பிய ராம்சரண் - வைரலாகும் போட்டோஸ்

34

லியோ பட ஷுட்டிங் காஷ்மீரில் நடந்து வருவதால் அங்கு எந்த பிரபலம் சென்றாலும் அவர்கள் அப்படத்தில் நடிப்பதாக தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன. சமீபத்தில் கூட பிக் பாஸ் பிரபலம் சுஜாவருணி காஷ்மீருக்கு தன் கணவருடன் சுற்றுலா சென்றிருந்தார். அவர் லியோ படத்தில் நடிப்பதற்காக தான் அங்கு சென்றுள்ளதாக வதந்தி பரவியது.

44

இந்நிலையில் தற்போது அதே போன்று மற்றொரு பிரபலமும் காஷ்மீருக்கு சென்றுள்ளதால் அவரும் லியோ படத்தில் நடிக்கிறாரா என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். அது வேறு யாருமில்லை கடந்த ஆண்டு வெளியான லெஜன்ட் திரைப்படம் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சரவணன் அருள் தற்போது காஷ்மீரில் இருப்பதாக ட்விட்டரில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்தவுடன் அவர் LCU-வில் இணைகிறார் என்றும் லியோ படத்தில் நடித்து வருவதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... எல்லா இடத்திலும் உன்னை தேடுறேன் மா... தாய் ஸ்ரீதேவி குறித்து பதிவிட்டு கலங்கிய ஜான்வி கபூர்

Read more Photos on
click me!

Recommended Stories