இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் ரிலீசான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் நாயகர்களாக நடித்திருந்தனர். சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் நட்பை மையமாக வைத்து இப்படத்தை எடுத்து இருந்தார் ராஜமவுலி. பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது.
இப்படம் ரிலீசாகி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், தற்போது அதற்கான மவுசு குறைந்தபாடில்லை. உலகளவில் நடந்து விருது விழாக்களில் ஆர்.ஆர்.ஆர். படத்துக்கு விருதுகள் குவிந்து வருகின்றன. கடந்த மாதம் இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இசையமைப்பாளர் கீரவாணி வென்றார். அவருக்கு பாராட்டுக்களும் குவிந்தன.
இதையும் படியுங்கள்... எல்லா இடத்திலும் உன்னை தேடுறேன் மா... தாய் ஸ்ரீதேவி குறித்து பதிவிட்டு கலங்கிய ஜான்வி கபூர்
இதற்கு அடுத்தபடியாக ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் டார்கெட் செய்து வருவது ஆஸ்கர் விருது தான். அதில் நாட்டு நாட்டு பாடல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளதால், அடுத்தமாதம் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவில் அப்பாடலுக்கு விருது கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. இதற்காக ஆர்.ஆர்.ஆர். படத்தின் நட்சத்திரங்கள் அமெரிக்காவுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
ஏற்கனவே இசையமைப்பாளர் கீரவாணி அமெரிக்காவில் முகாமிட்டுள்ள நிலையில், தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாயகன் ராம்சரண் இன்று அமெரிக்காவுக்கு கிளம்பி சென்றுள்ளார். அவர் விமான நிலையம் வந்த போது எடுத்த புகைப்படங்கள் சோசியல் மிடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது ஐயப்பனுக்கு மாலை போட்டுள்ள ராம்சரண், கருப்பு நிற ஆடை, கையில் துண்டுடன் காலில் செருப்பு எதுவும் அணியாமல் விமான நிலையத்திற்கு வந்தபோது எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து உள்ளன. விரைவில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராஜமவுலி ஆகியோரும் அமெரிக்கா செல்வார்கள் என கூறப்படுகிறது. ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் வருகிற மார்ச் 12-ந் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கம்பேக்னா இப்படி இருக்கனும்... பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடி வசூலித்து அதகளப்படுத்திய ஷாருக்கானின் பதான்