விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக பிரபலமானவர் ஜாக்குலின். இதையடுத்து அவருக்கு சீரியலில் ஹீரோயினாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து தேன்மொழி என்கிற சீரியலில் நடித்து வந்தார் ஜாக்குலின். வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த அந்த சீரியலுக்கு கடந்த ஆண்டு எண்ட் கார்டு போட்டனர். அந்த சீரியல் முடிந்த பின்னர் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்ட நடிகை ஜாக்குலின் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார்.