கம்பேக்னா இப்படி இருக்கனும்... பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடி வசூலித்து அதகளப்படுத்திய ஷாருக்கானின் பதான்

First Published | Feb 21, 2023, 11:02 AM IST

2023-ம் ஆண்டு ரிலீசான இந்திய திரைப்படங்களில் ஆயிரம் கோடி வசூல் என்கிற மைல்கல் சாதனையை ஷாருக்கானின் பதான் திரைப்படம் நிகழ்த்தி உள்ளது.

பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய ஷாருக்கான், அதன்பின் படிப்படியாக முன்னேறி இன்று பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ஜீரோ என்கிற திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதன்காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக ஷாருக்கான் நாயகனாக நடித்த ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாமல் இருந்து வந்தது.

இதையடுத்து அவர் கம்பேக் கொடுத்த திரைப்படம் தான் பதான். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்திருந்தார். மேலும் வில்லனாக நடிகர் ஜான் அபிரஹாம் மிரட்டி இருந்தார். ரிலீசுக்கு முன் இப்படத்தில் பாடல் காட்சியில் நடிகை தீபிகா படுகோனே காவி நிற பிகினி உடை அணிந்து நடித்திருந்ததால் சர்ச்சை வெடித்தது.

இதையும் படியுங்கள்... ஆம்பளைக்கு தான் ருசியா சமைக்கனும்.. பொம்பளைக்கு தயிர்சாதமே போதும்னு சொன்னாங்க - சுஹாசினி பகிர்ந்த ஷாக் சம்பவம்

Tap to resize

இதனால் ரிலீசுக்கு முன் இப்படம் பாய்காட் சர்ச்சையிலும் சிக்கியது. இதனால் பதான் படத்தின் வசூல் பாதிக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் கடந்த மாதம் 25-ந் தேதி ரிலீசான இப்படம் பாய்காட் சர்ச்சைகளையெல்லாம் ஊதித்தள்ளி வசூலையும் வாரிக் குவித்தது. அதன்படி இந்தி மொழியில் வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாக பதான் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், தற்போது இப்படம் ரூ.1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு ரிலீசான இந்திய திரைப்படங்களில் ஆயிரம் கோடி என்கிற மைல்கல் சாதனையை நிகழ்த்திய முதல் படம் பதான் ஆகும். இதைப்பார்த்த ரசிகர்கள் கம்பேக்னா இப்படி இருக்கணும் எனவும், ஷாருக்கான் தான் ஒரு பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டதாகவும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  இந்தியன் 2 படப்பிடிப்பில் பரிதாபமாக பறிபோன 3 உயிர்கள்... சென்டிமெண்ட் பார்த்து ஷூட்டிங்கை கேன்சல் செய்த ஷங்கர்

Latest Videos

click me!