நம்ப சென்னையில CSK மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதிக்கொள்வது என்றால் சும்மாவா... எப்படியும் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை எப்படியும் கால் கடுக்க வெயிலில் நின்று கூட டிக்கெட் வாங்கி பார்த்து விடுவார்கள்.
தன்னுடைய திரைப்பட புரோமோஷன் நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளாத நயன்தாரா... கணவர் விக்கி, மற்றும் அனிருத்துடன் இணைந்து CSK மற்றும் MI அணியின் கிரிக்கெட் மேட்சை விசில் போட்டு பார்த்துள்ளார்.
அதே போல் முதலமைச்சர் ஸ்டாலின், நடிகரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் போன்ற பல அரசியல்வாதிகளும் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு, கிரிக்கெட் விளையாட்டை பார்க்க வருகை தந்திருந்தனர்.
இதன் மூலம் சிஎஸ்கே அணி சென்னை மண்ணில் 13 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. கடைசியாக 2010ல் சென்னையில் மும்பை அணியை சிஎஸ்கே அணி வீழ்த்தியிருந்தது. அதன்பின்னர் சென்னையில் மும்பை அணியை சிஎஸ்கே வீழ்த்தியதில்லை. தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதான் மீண்டும் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி பெற்றது. இதை பிரபலங்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.