நடிகை நயன்தாரா, ஏற்கனவே சில... காதல் தோல்விகளை சந்தித்திருந்தாலும், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை 8 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.
ஆரம்பத்தில் காதல் குறித்து அதிகம் வெளிகாட்டிகொள்ளாத இந்த ஜோடி, பின்னர் அதிரடியாக காதலை ஒப்புக்கொண்டது. எப்போது இந்த ஜோடி திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டது மட்டும் இன்றி, திருமணமான 4 மாதத்தில் குழந்தை பெற்ற தகவலையும் பகிர்ந்து கொண்டனர்.
குழந்தை பிறந்த போது, ஏற்பட்ட சர்ச்சையில் இருந்து இருவரும் வெளியே வரவே 1 மாதத்திற்கு மேல் ஆன நிலையில், விக்னேஷ் சிவன் இயக்க இருந்த படமும், கடைசி நேரத்தில் கை நழுவியது. அதே போல் நயன்தாரா நடிப்பில் வெளியான படங்களுக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், குடும்ப ஜோதிடரை அணுகி இது குறித்து கேட்டுள்ளனர்.
அப்போது, ஜோதிடர்... நயந்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் திருமணம் நடந்த நேரம் சரி இல்லை என்றும், இதற்காக சில பரிகாரங்கள் செய்ய கூறியுள்ளதாகவும், எனவே இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளகாக சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. ஆனால் இந்த தகவல் பற்றி எவ்வித அதிகார பூர்வ தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பும் தனுஷின் 'வாத்தி'..! முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?