பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. பின்னர் ஒரு சில வருடங்களிலேயே, தமிழில் ஹீரோயினாக தனுசுக்கு ஜோடியாக 'மாப்பிள்ளை' படத்தில் அறிமுகமானார். இவர் குறுகிய காலத்திலேயே, தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து மிகவும் பிரபலமானார்.
விஜய், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், மிகவும் குண்டாக இருப்பதால் சில பட வாய்ப்புகளை இழந்ததாக கூறப்பட்டதை, தொடர்ந்து கடின உடல்பயிற்சி மற்றும் டயட் போன்றவற்றை மெயின்டெயின் செய்து, தன்னுடைய உடல் எடையையும் குறைத்தார்.
இதைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த முண்டோட அரண்மனையில், தன்னுடைய காதலரை கரம்பிடித்த ஹன்சிகா.. திருமணத்துக்கு பின்பும், தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இது குறித்து அவர் கொடுத்துள்ள விளக்கத்தில், ஒரு வேலை ஹன்சிகா வேகமாக வளர வேண்டும் என ஹார்மோன் ஊசி போட்டிருந்தால்... நான் டாட்டா விட பணக்காரராக இருந்திருப்பேன். இதை இப்படி சொல்பவர்களுக்கு பொது அறிவே இல்லையா? என ஹன்சிகாவின் தாயார் வெளுத்து வாங்கி உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.