
தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில், லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்திருந்த நயன்தாராவுக்கு, கோலிவுட் திரையுலகை தாண்டி தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளிலும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு, ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெரும் நடிகையாக மாறியுள்ளார்.
டாப் ஹீரோவுக்கு ஜோடி; ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிய சாய்பல்லவி.. இது தான் காரணமா?
டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தாலும், 10-ஆண்டுகள் ஹீரோயினாக திரையுலகில் தங்களை தக்க வைத்து கொள்வதே மிகவும் சவாலான விஷயம். ஆனால் நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஹீரோயினாக மட்டுமே நடித்து வருகிறார். இவர் 40 வயதை எட்டிய பின்னரும் கூட இவருடன் ஜோடி போட, பல முன்னணி ஹீரோக்கள் காத்திருக்கின்றனர்.
ஆனால் நயன்தாரா, தன்னை தனித்துவமான நாயகியாக காட்டிக்கொள்ள ஆசை படுவதால்... தொடர்ந்து வித்தியாசமான படங்களையும், மற்றும் ஹீரோயின் சப்ஜெட் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடிக்கிறார்.
6 மணி நேரம் லேட்; அதிகார திமிரால் ரசிகர்களை கால்கடுக்க காக்க வைத்த நயன்தாரா!
அந்த வகையில் தற்போது இவர் டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளதாகவும், இதை தொடர்ந்து இவரின் கைவசம், ராக்காயி, டாக்சிக் உள்ளிட்ட சுமார் 6 படங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. KGF பட நாயகன் யாஷ் நடிக்கும் டாக்சிக் படத்தில், நயன்தாரா யாஷுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் சிறந்த நடிகை என்று எப்படி நயன்தாரா பெயர் எடுத்துள்ளாரோ... அதே போல் குடும்பத்தை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வதிலும் அதிக அக்கறை காட்டுவார். இந்நிலையில் நடிகை நயன்தாரா, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை பாரம்பரிய முறைப்படி கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பெயரை மாற்றிய ஜெயம் ரவி; அடுத்தடுத்து கூறிய 2 குட் நியூஸால் குவியும் ரசிகர்கள் வாழ்த்து!
நயன்தாரா வெள்ளை நிற சல்வார் அணிந்துள்ள நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் அவரின் இரு மகன்களும் வேஷ்டி சட்டையில் இந்த ஆண்டு பொங்கலை வரவேற்றுள்ளனர். சூரிய பகவானுக்கு நன்றி கூறும் விதத்தில், தன்னுடைய டெரன்ஸ் பகுதியில் தான் நயன்தாரா சூரியனை வணங்கி இந்த ஆண்டு பொங்கலை வரவேற்றுள்ளார்.
விக்னேஷ் சிவன் பய பக்தியோடு தீபாராதனை கட்ட, நயன்தாராவும் பாரம்பரிய முறைப்படி மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபட்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, "உங்கள் வீட்டில் புன்னகை பொங்க..இனம் புரியா இன்பம் மனதில் பொங்க...நண்பர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க..பொங்கட்டும் தைப் பொங்கல். நம்மை வாழ வைக்கும் தமிழுக்கும் விவசாயிகளுக்கு இந்நாளில் மனமார்ந்த நன்றியை தெரிவிப்போம். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மகன் சஞ்சய்க்கு அஜித் கொடுத்த வாக்கு; படப்பிடிப்பு ஆரம்பமாகும் முன்பே இப்படி ஒரு பிரச்சனையா?