காமெடிக்கு கேரண்டி கொடுக்கும் மதகஜராஜா 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

First Published | Jan 14, 2025, 10:09 AM IST

Madha Gaja Raja Box Office Collection Day 2 Report : விஷால் நடிப்பில் வெளியான மதகஜராஜா படமானது 2 நாட்களில் எத்தனை கோடி வசூல் குவித்திருக்கிறது என்று இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

Madha Gaja Raja, Madha Gaja Raja Box Office Collection Day 2 Report

Madha Gaja Raja Box Office Collection Day 2 Report : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 12 ஆண்டுகளுக்கு முன் வெளியான வேண்டிய படமான மதகஜராஜா பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் வெளியானது. முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் கதை என்றால் பார்த்தால் எதுவும் கிடையாது. உதவி செய்கிறேன் என்ற பெயரில் விஷாலை வைத்து காமெடியாக முதல் பாதியை ஓட்டியிருப்பார் இயக்குநர். 2ஆவது பாதியில் நண்பர்களுக்கு உதவி செய்ய சென்று வில்லனை பழி தீர்ப்பார். இது தான் கதை. படம் முழுவதும் காமெடியாக போகும். அவ்வளவு தான். 12 ஆண்டுகளுக்கு முன் இந்தப் படம் வெளியாகியிருந்தால் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும்.

Madha Gaja Raja Collection Day 2

இப்போதும் ஒன்றும் குறையவில்லை. காமெடிக்காக இந்தப் படத்தை வேண்டுமானால் பார்க்கலாம். இதில் 2 ஹீரோயின் வேறு. ஆம், விஷாலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் அஞ்சலி இருவரும் நடித்திருந்தனர். கூடுதலாக மனோபாலா, மணிவண்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து சந்தானம், சோனு சூட், ஆர் சுந்தரராஜன், சிட்டி பாபு, நெல்லை சிவா, சத்யா கிருஷ்ணன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இவர்களுடன் ஆர்யா மற்றும் சதா இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.

Tap to resize

Madha Gaja Raja, Madha Gaja Raja Box Office Collection

2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மதகஜராஜா 2013 ஆம் ஆண்டு வெளியாக இருந்தது. ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக தள்ளி வைக்கப்பட்ட இந்தப் படம் இப்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வந்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 2 நாட்களில் ரூ.5.975 கோடி வசூல் குவித்த மதகஜராஜா முதல் நாளில் ரூ.3 கோடியும், 2ஆவது நாளில் ரூ.2.97 கோடி வசூல் குவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேசிப்பாயா, காதலிக்க நேரமில்லை ஆகிய முக்கிய படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் மதகஜராஜா பட வசூல் மேலும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Latest Videos

click me!