
Ajith Asks His Fans When Will You Live : பைக் மற்றும் கார் ரேஸ் மீது காதல் கொண்டு காதல் மன்னனாக திகழும் நடிகர் அஜித் குமார் துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு 3ஆவது இடம் பிடுத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ளார். 24ஹெச் சீரிஸ் தொடரில் அஜித் குமார் தலைமையிலான அணி கலந்து கொண்டு 991 பிரிவில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தது.
ஒரு நடிகராக இருந்து கார் ரேஸில் சாதனை படைப்பது இதுவே முதல் முறை. சினிமாவில் எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் அடுத்தடுத்து படங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால், தனது கனவான கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அஜித் குமாருக்கு இதைவிட பெரிய சந்தோஷம் என்று எதுவும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மகிழ்ச்சியின் உச்சத்தில் இந்திய நாட்டு தேசிய கொடியை கையில் வைத்துக் கொண்டு துள்ளிக் குதித்து வெற்றியை கொண்டாடினார்.
ஒட்டு மொத்த உலகமே கொண்டாடும் வகையில் மகத்தான சாதனையை நிகழ்த்தினார். போட்டிக்கு முன்னதாக அவர் மேற்கொண்ட பயிற்சியின் போது பிரேக் ஃபெயிலியர் காரணமாக கார் விபத்துக்குள்ளானது. இதில் எந்தவித காயமும் இல்லாமல் தப்பினார். இதையடுத்து இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்று அறிவித்தார். ஆனால், அறிவித்து கொஞ்ச நேரத்திலேயே கார் ரேஸில் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதில் அடுத்தடுத்த இடத்திற்கு முன்னேறிய அஜித் கடைசியில் 3ஆவது இடம் பிடித்தார்.
இந்த வெற்றியை தனது குடும்பத்தோடு உற்சாகமாக கொண்டாடினார். மேலும், மனைவி ஷாலினிக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தார். நடிகர் மாதவன் நேரில் சென்று அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து சினிமா பிரபலங்கள் பலரும் அஜித்துக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதில் சிவகார்த்திகேயன், கார்த்திக் சுப்புராஜ், ஆதிக் ரவிச்சந்திரன், விஜய் வசந்த், விக்ரம் பிரபு என்று பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கார் ரேஸில் சாதனை – சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்று மனைவிக்கு லிப் டூ லிப் கிஸ் அடித்த அஜித்!
இவ்வளவு ஏன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யும் தனது கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில் தான் அஜித் குமார் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், படங்கள் பார்ப்பது கொண்டாடுவது எல்லாம் சரி தான். ஆனால், அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்லிக் கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழ போறீங்க. நீங்கள் கொடுக்கும் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. ஆனால், நீங்கள் எப்போது வாழ்வீங்க. வாழ்க்கை சிறியது. இந்த நாளுக்காக வாழுங்கள். என் ரசிகர்கள் வெற்றி பெற்றால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு வீடியோவில் கடினமாகவும், நேர்மையாகவும் உழைக்க வேண்டும். உங்களையும், உங்களது குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலையில் சேர வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. சமீபத்தில் அஜித்தை கடவுளே அஜித் கடவுளே அஜித் என்று ரசிகர்கள் கோஷம் எழுப்பி வந்த நிலையில் அது தொடர்பாகவும் அஜித் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதன்படி, இனிமேல் யாரும் தன்னை கடவுளே அஜித் என்று அழைக்க வேண்டாம். அஜித் அல்லது அஜித் குமார் அல்லது ஏகே என்று அழைத்தால் போதும் என்று கூறியிருந்தார்.
அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி ஆகிய 2 படங்களுமே இந்த வருடம் திரைக்கு வர இருக்கிறது. இதில் விடாமுயற்சி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் அறிவித்தபடி வெளியாகவில்லை. விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. எப்படியும் கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மினி கோடம்பாக்கமாக மாறிய துபாய்! அஜித்தின் கார் ரேஸை பார்க்க படையெடுத்து வந்த கோலிவுட்!