விக்ரம் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் 'வீர தீர சூரன்'. எஸ்.யு. அருண் குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார். சூரஜ் வெஞ்சாரமூடும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடிகை துஷாரா நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து, அண்மையில் வெளியான கல்லூரும் என்கிற சிங்கிள் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியது .
25
Vikrams Veera Dheera Sooran Cast
இதுவரை விக்ரம் ஏற்று நடித்திராத ஒரு மளிகை கடை நடத்தி வரும் சாமானிய மனிதர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மனைவி - குழந்தை என சந்தோஷமாக வாழும்... ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை இந்த படம் பேச உள்ளதாக தெரிகிறது. தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஒரு மனிதர் அதற்காக என்னென்ன செய்கிறார் என்பதை, எதிர்பாராத திருப்புமுனையுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு ஜி.வி. பிரகாஷ் செய்ய குமார் இசையமைத்துள்ளார். விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான தங்கலான் பதிலும் ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் நடிப்பில், கடைசியாக வெளியான தங்கலான் திரைப்படத்திற்காக ரூ.30 கோடி மட்டுமே விக்ரம் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது.
45
Vikram Veera Dheera Sooran Salary
'தங்கலான்' திரைப்படம் வெற்றிபெறாத நிலையில், தற்போது நடித்துள்ள 'வீர தீர சூரன்' திரைப்படத்திற்காக விக்ரம் பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விக்ரம்... 'வீர தீர சூரன்' படத்திற்காக ரூ.50 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. இது தங்கலான் படத்தை விட 20 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான தங்கலான், தோல்வியை தழுவினாலும் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்ததாக வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பல மொழிகளில் வெளியான தங்கலான் நெட்ஃபிளிக்ஸில் வெளியானபோதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தங்கலானின் உண்மையான நீளம் 3 மணி நேரம் 10 நிமிடங்கள் என்று இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்தார். ஆனால் வணிக ரீதியான காரணங்களுக்காக படத்தின் நீளம் குறைக்கப்பட்டது. 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் 41 நிமிடமாக குறைக்கப்பட்டது. நேரடி பதிவில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் மிக்ஸிங்கில் பிரச்சினை இருந்தது. படம் வெளியான பிறகு அது சரி செய்யப்பட்டது என்றும் பா. ரஞ்சித் தெரிவித்தார்.